குவைத்தில் 334 இலங்கை பெண்கள் நிர்க்கதி
குவைட்டில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல, குவைட் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் குவைட்டில் உள்ள பாதுகாப்பு இல்லத்திற்கு சென்ற போதே இந்த பணிப்புரையை விடுத்தார்.
பலவித இன்னல்களுக்கு முகங்கொடுத்த நிலையில் 334 பேர் அந்த இல்லத்தில் தங்கியிருந்தனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் 5 வயதிலும் குறைந்த வயதுகளையுடைய பிள்ளைகளின் தாய்மார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து வயதிலும் குறைந்த வயதுடைய பிள்ளைகளின் தாய்மார்கள் வெளிநாடு செல்ல முடியாது என்பது இப்போது இலங்கையில் உள்ள சட்டம்.அப்படி இருக்கும் போது இப்பெண்கள் எவ்வாறு வெளிநாடு வந்தார்கள்.கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு பல ஆயிரங்களை இலன்ச்சமாக கொடுத்து வருகிறார்கள்.கள்ள பதிவு கள்ள ஐடிங்காட் எல்லாம் செய்து கொடுப்பது இந்த கேடுகெட்ட வெட்கம் கெட்ட பிச்சகாரிக்கிட்டையும் பிச்ச எடுக்கும் விதானைகல்தான்.ஒரு சிலரை தவிர நம் சமுதாயத்தின் கிராம நிலதாரிகள் மிகவும் மோசமானவேர்கள் இருப்பது வெட்கக்கேடாக இருக்கு. வாய் கூசாமல் இலஞ்சம் தாங்கள் என்று கேட்கும் கேவலம் இந்த கிராம நிலதாரிகளிடம்தான் இருக்கிறது .முகத்துதி பாராமல் இவர்த்களை இலஞ்ச ஊழல் ம் அதிகாரிகளிடம் பிடித்து கொடுக்க வேண்டும்.அரச ஊழியர்களிலே மிகவும் கேவலம் கேட்டவேர்கள் இந்த கிராம நிலதாரிகல்தான் மன்னிக்கணும் ஒரு சிலரை தவிர.
ReplyDelete