Header Ads



2 கட்சிகளுக்குமிடையில் மெகா டீல், அதனால் குற்றவாளிகளுக்கு மீண்டும் அமைச்சுப் பொறுப்பு

ஊழல், மோசடிகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அரசின் கொள்கைகளை அப்படியே தேசிய அரசாங்கமும் முன்னெடுத்து வருவதாக வசந்த சமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான மக்கள் குரல் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க, இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள வசந்த சமரசிங்க,

முன்னாள் அரசாங்கத்தின் ஊழல் அமைச்சர்கள் மீதான விசாரணைகள் அனைத்தும் தற்போது இந்த அரசாங்கத்தினால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இரண்டு கட்சிகளுக்கும் இடையில் மெகா டீல் கலாச்சாரமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிபலனாகவே குற்றவாளிகள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல், முறைகேடுகள் தொடர்பில் ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எனினும் இதுகுறித்த விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கத்தின் உத்தரவு வரும்வரை அதிகாரிகள் காத்திருப்பதாகவும் வசந்த சமரசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடுகள் குறித்து அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால், அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் சேகரிக்கப்பட்டுள்ள சாட்சியங்களுடன் பொதுமக்கள் மன்றத்திற்கு அவற்றை எடுத்துச் செல்லப்போவதாகவும் வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.