Header Ads



சேயா படுகொலை - 25 பேரிடம் விசாரணை

-எம். எஸ். பாஹிம்-

பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்யப்பட்ட சேயா சதெளமி சிறுமியின் உடல் பாகங்கள் நீதிமன்ற உத்தரவிற்கமைய நிபுணத்துவ மருத்துவ விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. சிறுமியின் கொலை தொடர்பில் சுமார் 25 பேரிடம் வாக்குமூலம் பதியப்பட்டுள்ளதோடு இதுவரை எவரும் கைதாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

5 வயதான சேயா சதெளமி கடந்த 11 ஆம் திகதி காணாமல் போனதோடு மறுநாள் அவரின் சடலம் வீட்டுக்கு சற்று அருகில் மீட்கப்பட்டது.

சம்பவம் இடம்பெற்று ஒரு வாரம் கடந்தும் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. சிறுமியின் கொலை தொடர்பில் அவளின் பெற்றோர், அயலவர்கள், ஊரார் உட்பட சுமார் 25 பேரிடம் நீண்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக சி. ஐ. டி. விசாரணை நடத்தி வருகிறது. பொலிஸ் மா அதி பரின் நேரடி கண் காணிப்பின் கீழ் விசேட சி. ஐ. டி. குழுவொன்று கொடதெனியாவ பகுதியில் தங்கியிருந்து தேவையான தகவல்களை திரட்டி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

சந்தேக நபர்கள் மூவர் கைதானதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ள போதும் எவரும் கைதாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். விசாரணைக்கு உட்படுத் தப்பட்டவர்களிடையே 17 வயது பிரதேச மாணவர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை சிறுமியின் கொலையுடன் தொடர்புள்ள நபர்களை கைதுசெய்து கடும் தண்டனை வழங்குமாறு கோரி நாட்டின் பல பகுதிகளிலும் நேற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

1 comment:

  1. need to investigate PBS , they do like this to make some problem in Sri Lanka

    ReplyDelete

Powered by Blogger.