Header Ads



200 மில்லியன் ரூபாய் நஸ்டத்தை, ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணை

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் அரச ஊடகம் ஒன்றுக்கு 200 மில்லியன் ரூபாய் நஸ்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் மூவரிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முதல் அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் பீ.பி.ஜெயசுந்தர ஆகியோரிடமே இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை இவர்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ. சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதியின் விளம்பரங்களை பணத்தை பெறாது வௌியிட்டதாகவும் மைத்திரிபால சிறிசேன சார்பில் பணம் பெறப்பட்டும் விளம்பரங்கள் வௌியிடப்படவில்லை எனவும் இதனால் குறித்த அரச ஊடகத்திற்கு நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை மைத்திரிபால சிறிசேன சார்பில் பெறப்பட்ட பணம் விளம்பரங்களை வௌியிடாமையால் திருப்பி கொடுக்க நேரிட்டதாக தெரியவந்துள்ளது.

2 comments:

  1. கடைசியில் ஒன்றும் நடக்காது, யாருக்கும் தண்டனையும் கிடைக்காது, ஒரு ரூபாவும் திரும்பிக் கிடைக்காது, ஆனால் வழக்கு விசாரணை, நீதிமன்றம், சட்டத்தரணி, ஊழியர்கள், ஆவணங்கள் என்று இன்னொரு 50 மில்லியன் (குறைந்த அளவு) செலவாகி இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.