Header Ads



''ஐ.நா. அறிக்கைக்கு, புலிகளினால் 15 மில்லியன் டொலர் செலவு''

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை 15 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்ட ஒரு போலி அறிக்கை என்று திவயின பத்திரிகை காட்டமாக விமர்சித்துள்ளது.

திவயின வார இதழின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான கட்டுரையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் ஜெனீவா அறிக்கை தாறுமாறாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்களாவன, ஜெனீவா அறிக்கை அடிப்படையில் எதுவிதமான ஆதாரங்களும் அற்றது. விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் தகவல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதற்காக புலி ஆதரவாளர்களால்ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை 15 மில்லியன் டொலர் செலவில் 

இந்த அறிக்கைக்கு ஆதாரங்களைத் திரட்டிக் கொள்ள முடியாமற்போன நிலையில் கெலம் மக்ரேவின் ஆவணத்திரைப்படத்தைக் கூட ஒரு ஆதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளது.

அதேநேரம் பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்று நடைபெறாமலே இந்த அறிக்கையில் இலங்கை அரசாங்கம் மற்றும் படையினர் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து முன்னதாகவே தமிழீழ ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அவர்களின் பங்களிப்புடன் இந்த அறிக்கை போலியான ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் திவயின பத்திரிகை காட்டமாக விமர்சித்துள்ளது.

1 comment:

  1. தூய துவேச பத்திரிகை

    ReplyDelete

Powered by Blogger.