இலங்கையில் 1115 மரண தண்டனைக் கைதிகள்
நாட்டில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் சாவுத் தண்டனை விதிக்கப்பட்டுத் தண்டனைநிறைவேற்றப்படாத நிலையில் ஆயிரத்து 115 கைதிகள் இருப்பதாகச் சிறைச் சாலைகள் திணைக்களம் தெரிவித் துள்ளது. இவர்களில் 480 பேர் மாத்திரம் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யாதவர்கள் எனச் சிறைச்சாலைகள்ஆணையாளர் நாயகம் ரோஹான்புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை, போகம்பரை, மஹர ஆகிய பல்வேறு சிறைச்சாலைகளில் இவ்வாறு சாவுத்தண்டனைவிதிக்கப்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் ஆண்களே அதிகமாகஉள்ளனர்.
இதேவேளை 1976ஆம் ஆண்டுக் குப் பின்னர் இலங்கையில் சாவுத் தண்டனைநடைமுறைப்படுத்தப் படவில்லை.அத்துடன் தற்போது நாட்டில் அலுக் கோசு பதவி வெற்றிடமாக உள்ளமையினால் அதற்காக சிறைச்சாலைகள்திணைக்களத்தினால் அண்மையில் நாடு முழுவதும் விண்ணப்பம் கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment