பொருத்தமற்ற வேறு சடலங்களை தோண்டியெடுத்து, வாக்குகளை அதிகரிக்க UNP முயற்சி - டிலான் பெரேரா
தேர்தல் நடவடிக்கைகளில் வங்குரோத்தடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தோண்டியெடுக்க வேண்டிய சடலத்தை விடுத்து அவர்களுக்கு பொருத்தமற்ற வேறு சடலங்களை தோண்டுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு பொருத்தமற்ற வேறு சடலங்களை தோண்டியெடுத்து கட்சியின் வாக்குகளை அதிகரித்துக்கொள்ள முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பொது தேர்தல் குறித்து புத்திஜீவிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குழுக்களினால தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய முன்னணி 118, 114 அல்லது 112 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளதாக டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று வரை 92 பேர் கொலை செய்யப்பட்டுள்ளர். நல்லாட்சி என்ற போர்வையில் ஆட்சியை ஏற்றவர்கள் அதில் பல திட்டங்களை இன்றுவரை நிறைவேற்றவில்லை. மாறாக இதுவரைக்கும் அவர்கள் ஆட்சி ஏற்ற நாளில் இருந்து இன்றுவரை 92 கொலைகளை தான் செய்துள்ளார்கள் நல்லாட்சி என்பது வெறும் மாயை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா அவர்களே.! உங்கள் தலையை ENT டாக்டர் ஒருவரிடம் காட்டி அவசரமாக சிகிச்சை பெற்றால் எஞ்சியுள்ள மூளையையாவது பாதுகாக்கலாம்.
ReplyDeleteUNAKKU MATTUM EANDA ITHILA AWWALAVU AKKARA APPA INTHA KULAICH SAMVATTHIL UNAKKUM PANGU IRUKKU POLA NICHAYAM UNAKKUM THANDANAI UNDU
ReplyDeleteதுள்ளுற மாடு பொதி சுமக்கும் என்பார்கள், இந்தாள் துள்ளுறத பாத்தா, இந்தாளும் இதுல சம்பந்தப்பட்டிருப்பான் போலிருக்கு.
ReplyDeleteமஹிந்தவின் அடுத்த கன்டரக்ட் வேரொரு சடலத்தைத் தோண்டி எடுத்து யூ.என்.பீ. வாக்குபெட்டியை நிரப்பப் போகிறார்களாம். நாட்டுமக்கள் அனைவரும் சேரந்து இவனை அங்கொடையி்ல் அடைத்துவைக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் சார்பாக வேண்டிக் கொள்கி றேன்.
ReplyDeleteதோண்டி எடுக்கப்பட்ட சடலம் உண்மையானது இல்லை என்றால், உண்மையான சடலம் எங்கு இருக்கிறது என்பது நிட்சயம் டிலானுக்கு தெரிந்திருக்க வேண்டும். எனவே இது சம்பந்தமாக டிலானை புலனாய்வு பொலிசார் விசாரணை செய்ய வேண்டும்.
ReplyDeleteAppa bodiya olithu vitingalo ganga senjingapola kaal pppapadapada nadukama
ReplyDelete