வசீம் தாஜுத்தீனின் ஜனாஸாதான், ஊடகங்களுக்கு காட்ட வேண்டாமென வேண்டுகோள்
-அஸ்ரப் ஏ சமத-
இன்று விசேட வைத்திய பாரிசோதகா், கல்கிசை மஜிஸ்ரேட் நீதிபதி, மற்றும் குற்றத் தடுப்பு பொலிஸ் அத்தியட்சகா், கொண்ட குழு தெஹிவளை களுபோவில முகையதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் இன்று காலை 8.30 மணிக்கு தோண்டி எடுக்கப்பட்டது.
வசீம் குடும்பத்தினா் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கினங்கள உடலை தோன்றும்போது அதனை ஊடகங்களுக்கு காட்டுவது தவிா்த்துக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தனா்.
அதன் பின்னா் மையவாடி பள்ளிவாசல்கள் முற்றாக மறைக்கபட்டு பொலிசாா் பாதுகாப்பின் போடப்பட்டு அங்கு மையவாடிக்கு வெளியில் கடுப்பு நிற வாகனத்தில் அவரது எழும்புகள் பாகங்கள் கொண்டு செல்லப்பட்டன.
இங்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், விசேட வைத்திய அத்தியட்சகரும் இலங்கை அதற்குரிய சகல வசதிகளும் உள்ளன. அவரது உடலை அவரது சகோதரி, சகோதரா் அடையாளம் காட்டியிருந்தனா். பள்ளிவாசலின் பதிவு உள்ளது. அவா் அடக்கப்பட்ட இடம் தோட்டப்பட்டு எழும்புகள் கொண்டு ஆராய்ச்சிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ் உடம்பில் அடி காயங்கள், எழும்பு முறிவு தலை ஓட்டி்ல் அடி காயங்கள் பற்றி கண்டு பிடிக்க முடியும் என வைத்திய அத்தியட்சகா் சொல்லுகின்றாா். கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி இவரது ஜணாசா அடக்கம் செய்யப்பட்டுள்ளது. என வைத்திய அத்தியட்சகா் தெரிவித்தா்.
Nothing will happen to MR FAMILY
ReplyDeleteMake duah no any powerful weapon than duah in this world my friend
ReplyDelete