முஸ்லிம்கள் எனக்கு, அன்பு காட்டுபவர்கள் - கயந்த கருணாதிலக
நடைபெறும் பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி அதி பெரும் பான்மை ஆசனங் களைப் பெற்று ஸ்திரமான ஆட்சியை அமைக்கும் என்ப தில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. எனவே இவ்வர சில் இன வேறுபாடுகள் இன்றி சகல மக்களும் ஒற்று மையுடன் வாழ்வதை உறுதி செய்ய அணிதிரள்வோம்.
காலி கோட்டையில் அமைந்துள்ள ஐ.தே.கட்சித் தொண்டர் ஹஸன் கையிஸினால் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக மேற்கண்டவாறு கூறினார்.
முஸ்லிம்கள் என்றும் ஐ.தே.கட்சியை ஆதரிப்பவர்களே! அது எனக்கு நன்கு தெரியும். இம்முறை பொதுத் தேர்தலில் அவர்களின் ஆதரவு வெளிப்படையாகவே உள்ளதைக் காணலாம். இது காலி தேர்தல் தொகுதியை மட்டும் வெற்றி கொள்வதாக அமையப்போவதில்லை. காலி மாவட்டத்தில் அதிகூடிய ஆசனங்களை ஐ.தே.க. வெற்றி கொள்ளும்.
கடந்த பல ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் ஐ.தே.கட்சி சார்பில் தனித்து நின்று மக்களுக்காக குரல் கொடுத்தவன் நான் மட்டுமே. இது அனைவரும் அறிந்த உண்மை. கடந்த ஆட்சிக்காலத்தில் பல அங்கத்தவர்கள். கோடிக்கணக்கான காசுக்கு ஆசைப்பட்டு விலை போனார்கள். எனக்கும் வலைவிரித்தார்கள். நான் விலைபோக வில்லை. தென்பகுதி மக்களுக்காக பொறுமையோடு குரல் கொடுத்து வந்தேன். அது இன்று என்னை அமைச்சராக மட்டுமன்றி பொறுப்பு வாய்ந்த பல துறைகளுக்கு உயர்த்திவிட்டது. இது எனது வெற்றியல்ல. என்னை நம்பி வாக்களித்த மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
முஸ்லிம் வாக்காளர்கள் எனக்கு அன்பு காட்டுபவர்கள். அது இம்முறை பல மடங்காக அதிகரித்துள்ளதை நான் உணர்கிறேன். என்னிடம் இன, மத வேறு பாடு கிடையாது. மக்கள் என்னை நேசிக் கிறார்கள். நான் மக்களை நேசிக்கிறேன்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் தர்கா நகர் அசம்பாவிதத்தின் போது முஸ்லிம்கள் உயிர்களை, உடைமைகளை இளந்தனர். பல துன்பங்களை அனுபவித்தனர். நான் எனது தேர்தல் தொகுதியில் உள்ள துந்துவை கிராம முஸ்லிம் மக்களை விழித்திருந்து காத்த அனுபவம் என் மனக் கண்முன் காட்சி தருகிறது. இனி இப்படியான செயல்கள் நாட்டில் தலைதுக்க முடியாது. அதற்கு இடமளிக்கவும் முடியாது ஒன்றுபடுவோம்.
Post a Comment