Header Ads



நிந்தவூரில் மயில் அலுவலகம் மீது தாக்குதல்!

-மு.இ.உமர் அலி-

நிந்தவூர்  பிரதான வீதியில்  சிலதினங்களுக்கு  முன்பாக  திறக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  கிளை அலுவலகம்  ஒன்று  இனம்தெரியாத நபர்களால்  சேதமாக்கப்பட்டிருக்கின்றது.

நிர்மாணவேலைகள்  முடிவுறாத (சூபியா மனேஜர்  வளவு ) மாடிக்கட்டிடமொன்றின் கீழ்த்தளம்  இந்த  அலுவலகமாக  திறக்கப்பட்டு சுவரொட்டிகள், பதாகைகள் ,கொடிகள் மூலம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிரதான வீதியில்  அமைந்திருந்ததால்  வீதியால் செல்லும் அனைவரும் இதனை  திரும்பிப் பார்த்துத்தான் செல்வார்கள்.

நேற்று இனந்தெரியாத நபர்களால் இது சேதமாக்கப்பட்டதுடன்   போஸ்டர்களின்  மீது  கழிவு எண்ணெயும்   வீசப்பட்டிருக்கின்றது. 




1 comment:

Powered by Blogger.