மட்டக்களப்பில் அமீர் அலிக்கு ஆதரவாக ரணில் - றிசாத், ஆசாத் சாலி பங்கேற்பு
-அனா-
நடைபெறப்போகும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் (09.08.2015) மாலை ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் றிஸாட் பதியுதீன், மேல்மாகாண சபை உறுப்பினர் ஆஸாத் சாலி, ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தயாகமகே மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
Also Can we see any pics from Kalmunai meeting..? pls
ReplyDelete