Header Ads



வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா, தொடர்பில் சந்தேகம்..!



வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா இன்று திங்கட்கிழமை, 10 ஆம் திகதி தோண்டப்படவுள்ள நிலையில், அவரது ஜனாஸா குறித்த சந்தேகங்களும் வெளிக்கிளம்பியுள்ளன.

இப்போது 3 வருடங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட வசீம் தாஜுத்தீனின் ஜனாஸாவை தடயங்கள் இன்றி சிதைத்திருக்கலாமென்ற சந்தேகத்தையும் சில தரப்புக்கள் வெளிப்படுத்தியுள்ளன.

கடந்த 2 வாரங்களாகவே வசீம் தாஜுத்தீன் ஜனாஸா அடங்கப்பெற்றுள்ள பள்ளிவாசலுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 வருடங்கள் எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படாமல் இருந்துவந்த நிலையில் அவரது ஜனாஸாவை மாற்றியிருக்கலாம் அல்லது சிதைத்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

எனினும் நீதிமன்ற உத்தரவுக்கமைய வசீம் தாஜுத்தீன் புதைக்கப்பட்டதாக கூறப்படும் புதைக்குழி தோண்டப்படும்.

சில வேளைகளில் அங்கு வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா காணப்படாதவிடத்து, அவர் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவார். 

ஜனாஸா தோண்டப்படுகையில் பெருமளவு மக்கள் அங்கு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வசீம் தாஜுத்தீனின் ஜனாஸாவை உறுதிப்படுத்துவதற்கான அத்தனை ஏற்பாடுகளும் தெஹிவளை முஸ்லிம் மையவாடிக்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக மற்றுமொரு இடத்திற்கும் ஜனாஸாவை கொண்டுசெல்லவும் தீர்மானிக்கபட்டுள்ளது.


1 comment:

  1. கறுப்பு ஜூலைதான் நினைவில்
    வருகிறது
    ஷீ ஸ்ரீ என்ற சின்னத்தை
    நெருப்பில் சூடாக்கி இதயத்தில் தாறாகப் பதித்தார்கள்
    டயரிடையே உயிருடன் போட்டெரித்தார்கள்
    வதை வதையாய் கண்டம் துண்டமாய் அப்பாவி தமிழ் மக்களை கொத்துக் கொத்தாய் கொன்று குவித்தார்கள் இனவெறியர்கள்

    அதை விடவும் ஒருபடி மேல் சென்று
    வீரர் தாஜூதீனின் கொலை மிகக் கொடூரமானது
    கல்நெஞ்சத்தையும் கறைய வைக்கும் நாட்டுக்காக ஓடிவிளையாடிய வீரனின்
    கொடூரக் கொலைக்கு உடந்தையாகி
    ஒருதுளி இரத்தக்கறை படியாத கரமென்று முரசுகறைய கத்தித் திறிகிறான் பக்்ஷ
    சிறுபான்மையினரென்றாலே சீறிப்பாயும்
    சீங்........கிய உனக்கு
    புத்தனின் போதனை போதவில்லையா
    உன் புத்தியை தீட்ட
    ஏனின்னும் கொலைவெறியில்
    கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறாய்
    புத்தன் மீளெழுந்து
    வந்தேனும் திருந்துவாயா

    நீ புதைத்தது ஒரு வசீமைத்தான்
    என்றாலும்
    வசீமின் கரங்களில் தவழும் குழந்தைகள் விதைகளாகி பூவாகி மொட்டாகி கிளைகளாகி
    பக்ஷ பரம்பரையினர் குட்டி போட்டு பத்து ஜென்மம் சென்றாலும் மரண தண்டனைக்கான தீர்ப்பை எழுதியே தீர்வார்கள்
    சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறினால்

    ReplyDelete

Powered by Blogger.