இறுதி அமைச்சரவை கூட்டத்தில், உணர்ச்சிபூர்வமான ஜனாதிபதி மைத்திரி
எதிர்வரும் 18ம் திகதி தற்போதைய அமைச்சரவையே சந்திக்க வேண்டும் என்பதே தனது எதிர்ப்பார்ப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அமைச்சரவையின் இறுதிக் கூட்டத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தற்காலிக அரசாங்கமும் அதன் அமைச்சரவையுமே பதவியில் இருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் கடந்த வாரம் கூடியது.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அமைச்சர்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சிலர் மாத்திரமே சமுகமளித்திருந்தனர். அமைச்சரவைப் பேச்சாளர் என்பதால், அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்று வந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தொடர்ந்தும் சமூகமளித்து வந்தார்.
இறுதியான அமைச்சரவைக் கூட்டம் எவ்விதமான சுவாராஸ்யமும் இன்றி முடிவடைந்தது. அமைச்சரவைக் கூட்டத்தின் இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உணர்ச்சிபூர்வமான உரையை நிகழ்த்தினார்.
அனைவரும் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். எதிர்வரும் 18ம் திகதி இதே அமைச்சரவையை சந்திக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
ஜனவரி 8ம் திகதி பெற்ற வெற்றிய முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய அமைச்சரவை தெரிவாக வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனக் கூறி விட்டு ஜனாதிபதி தனது உரையை முடித்து கொண்டார்.
You have to say in public so the people who have voted will understand your opinion.
ReplyDelete