Header Ads



வசீம் தாஜூடின் படுகொலை - மைத்திரியை தலையிட கேட்கிறார் அதிரடிப்படைத் தளபதி


ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலைத் தொடர்பாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மேலதிக தகவல்களை என்னிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புவார்களாயின், அவர்களிற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவே இருக்கின்றேன் என ஓய்வு பெற்ற வட மாகாணத்திற்கான விசேட அதிரடிப்படைத் தளபதி நிமல் லிவ்கி தெரிவித்துள்ளார்.

தாஜுடினின் இறப்பு தொடர்பில் தான் சந்தேகிப்பதாக தெரிவித்த ஓய்வு பெற்ற விசேட அதிரடிப்படை தளபதி லிவ்கி, தி ஐலன்ட் ஆங்கில பத்திரிகைக்கு தான் எழுதிய “ ஒருவரது இறப்பு தொடர்பில் விசாரணை செய்ய ஏன் மூன்று ஆண்டுகள்” எனும் கட்டுரையிலேயே பல வினாக்களை தொடுத்துள்ளார்.

அரச பகுப்பாய்வாளரின் மரண விசாரணை அறிக்கைக்கும் பிற அதிகாரிகளின் மரண விசாரணை அறிக்கையும் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரணாகவே அமைகின்றது.

இம்மரணம் தொடர்பான விசாரணைகள் ஏன் குற்றத்தடுப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கபடவில்லை?

இவ்விசாரணைகள் தாமதித்தமைக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும். அரச அதிகாரிகளினால் புரியப்பட்ட இக்குற்றங்கள் தொடர்பாக ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குற்றம் புரிந்தவர்கள் ஒரு பொழுதும் மக்களின் பணத்தில் செல்வாக்கான வாழ்க்கையினை இந்நாட்டில் வாழ அனுமதிக்க கூடாது.

நான் ஒரு பொலிஸ் அதிகாரி. எனவே விசாரணைகள் முன்னெடுக்கப்படும் காலக்கட்டத்தில்  நான் முதன் முதலாக கண்ணுற்ற காட்சி தொடர்பில் விபரிக்க விரும்பவில்லை.

ஆனால் இதுதொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நான் உரிய அதிகாரிகளிடமும் அதிமேதகு ஜனாதிபதியிடமும் கோரிக்கையொன்றை முன்வைக்க விரும்புகின்றேன்.

இறுதி தருணத்திலேனும் உண்மைகள் வெளிக்கொணரப்படுமென நான் நீதிதேவதை மேல் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

வசீம் தாஜுடின் என்பவர் மிகவும் எளிமையான அப்பாவியான ஒரு இளைஞன். அவனது இறுதிக்காலம் வரையில் என்னை அவனது சொந்த தந்தையாகவே நடாத்தினான்.

என்னை காணும் சந்தர்ப்பங்களில் எல்லாம் என்னருகே ஓடி வருவான். அண்மைய காலங்களில் நான் பத்திரிகைகளை படிக்கும் பொழுது குற்றத்தடுப்பு பிரிவினர் தற்சமயம் உரிய விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதாக அறிந்துக்கொண்டேன்.

எனவே மூன்று ஆண்டுகளின் பின்னர் உண்மை வெளிக்கொணரப்படுகின்றதென நம்பிக்கை என்னுள் பிறந்துள்ளது.

இம்மரணம் தொடர்பான உங்களது சந்தேகத்தினை வெளியிடுவதற்கு ஏன் மூன்று ஆண்டுகள் காத்திருந்தீர்கள் என வினவியப் பொழுது, முன்னாள் பொலிஸ் அதிகாரி மற்றும் இந்நாள் விசேட அதிரடிப்படை தளபதி பின்வருமாறு தெரிவித்தார்.

அக்காலத்தில் நான் ஓய்வுப் பெற்றுவிட்டேன். எனவே இதுதொடர்பில் பேசுவதற்கு என்னிடம் அதிகாரம் இருக்கவில்லை. ஆனால் என்னுடைய சந்தேகத்தை மற்றும் ஆதங்கத்தை வெளியிடுவதற்கு இதுவே தக்கசமயமென கருதுகின்றேன்.

நான் தாஜுடினுடன் ஒரு தந்தையான ஏன் ஒரு பயிற்றுவிப்பாளராக, ஏன் நண்பனாகவும் பழகியுள்ளேன். தற்சமயம் குற்றத்தடுப்பு அதிகாரிகள் சரியான பாதையில் பயணிக்கின்றார்கள்.

எனவே மிக விரைவில் உண்மை வெளிக்கொணரப்படுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களோ, 21ம் திகதி வைகாசி மாதம் 2012ம் ஆண்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மரண விசாரணை அறிக்கையில் இறப்பதற்கு முன்னர் தாஜுடின் சித்திரைவதைக்கு உள்ளாக்கப்பட்டாரென குறிப்பிடப்படவில்லையென தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயில் நீதிமன்ற உத்தரவிற்கமைய தாஜுடீனின் உடலானது இன்று காலை மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டதுடன், இச்சடலத்தின் அடையாளங்களை உறுதி செய்யும் பொருட்டு உடற்கூற்றியல் பரீட்சை முன்னெடுக்கப்பட வேண்டுமென வைத்தியர் அஜித் தென்னகோன் நேற்று கூறினார்.

மேலும் சடலமானது பொலித்தீன் பையினால் சுற்றப்பட்டு தகனஞ் செய்யப்பட்டமையினால் பாரியளவில் அழிவடையாமல் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நிலையிலுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. யா அல்லாஹ் இந்த தளபதியின் குடும்பத்தையும் இவரையும் நீ பாதுகாப்பாயாக அவருக்கும் அவரின் குடும்பத்திற்கும் ஹிதாயத்தை நசீபாக்குவாயாக எங்களுக்கும் ஹிதாயத்தை நசீபாக்குவாயாக (ஹிதாயத் என்பதின் பொருள் நேர் வழி இன்று நாமும் பேரளவில் முஸ்லிம்களாக உள்ளதை கருத்தில் கொண்டு கேற்க்கப்பட்ட துஆ)

    ReplyDelete
  2. cannot describe in words about this gentleman senior d.i.g ( retired ) nimal lewke. google it.

    ReplyDelete
  3. May Allah Guide our Muslims Brothers with religious knowledge to know, who we can LOVE and whom we can not love as per the Allah's instruction in Quran.

    May Allah Guide all human beings on earth.

    ReplyDelete
  4. May Allah Guide our Muslims Brothers with religious knowledge to know, who we can LOVE and whom we can not love as per the Allah's instruction in Quran.

    May Allah Guide all human beings on earth.

    ReplyDelete

Powered by Blogger.