Header Ads



'அமைச்சரவையில் இருக்க வெட்கப்படுகின்றேன் என கூறியபோது, மஹிந்த கோபமுற்றார் - றிஷாட்

கடந்த 1983ம் ஆண்டிற்குப் பிறகு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியிலே மிகப்பெரிய இனப்படுகொலை நடந்துள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் நிந்தவூரில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இனவாதம் பேசி அப்பாவி சிங்கள  இளைஞர்களை தூண்டி விட்ட ஞானசார தேரரை கைது செய்து சிறையில் அடைக்குமாறு வேண்டியும், தனக்கு சிங்கள வாக்குகள் கிடைக்காமல் போய்விடும் என்று பயந்து அன்று அவரை கைது செய்யாமல் விட்டிருந்தார். இன்று அவர் அந்த பிரதிபலனை அனுபவிக்கின்றார்.

கடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் இருக்க வெட்கப்படுகின்றேன்  என்று அவரிடம் கூறியபோது கோபமுற்றவராக எழுந்து வெளியே சென்றார். அப்படி இருந்து ஒரு நாளாவது என்னை வெளியே செல் என்று சொல்லவில்லை. இருந்த போது மு.கா தலைவரைப் பார்த்து அதிக தடவை 'விரும்பினால் இரு அல்லது வெளியே போ!' என்று பலமுறை கூறியிருக்கிறார். இப்படி இருந்த போதுதான் கடந்த ஜனாதிபதித்தேர்தலில் அவரிற்கு பாடம் புகட்ட அவரிடம் இருந்து வெளியேறினோம். நாம் ஒரு போதும்  மஹிந்தவிற்கு  அடிபணியப் போவதில்லை நாம் அவரிற்காக வக்காலத்து வாங்கப் போவதுமில்லை. இன்று சிலர் மக்களின் வாக்குகளிக் கொல்லையடிப்பதற்ற்காக என் மீது அபாண்டமான பழிகளை சுமத்துகின்றனர். ஜனாதிபதித்தேர்தலில் முதன் முதலில் நான் வெளியேறிய பிறகுதான் இவர்கள் வெளியேறி மக்களை மனச்சாட்சின் படி வாக்களிக்கத் தூண்டியவர்கள்.

ஆனால் நாம் அம்பாறை  மாவட்டத்தில் யாரையும் வீழ்த்துவதற்காகவோஅல்லது அவர்களை தோற்கடிப்பதற்காகவோ  நாம் இங்கு வரவில்லை. நீங்கள் விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள். ஆனால் சொந்தங்களுக்கிடையே சண்டைகளைப் பிடித்து அதன் மூலம் குடும்பங்கள் பிரிவது எனக்கு விருப்பம் இல்லை. எமது வாக்கை விடை எமது ஒற்றுமையே முக்கியமானதாகும். தயவு செய்து பிரிந்து விடாதீர்கள். எம்மிடம் உண்மையும் நியாயமும் இருப்பின் எமக்கொரு சந்தர்ப்பதினைத்தாருங்கள். அதற்காக ஊர்களுக்குள்ளே குழுக்களாகப் பிரிந்து விடாதீர்கள்.

எமது சமூகம் யாரிற்கும் அடிமைப்பட்டு வாழும் சமூகம் கிடையாது. எனவே அந்த சமூகத்தை தலை நிமிர்ந்து வாழச் செய்வதற்காக எமக்கு வாகளியுங்கள். இல்லையென்றால் தொடர்ந்து வாக்களிப்பது போல் றஊப் ஹக்கீமிற்கு வாக்களியுங்கள்.

கடந்த காலங்களில் மு.கா தலைவரினால்  பள்ளிகள் உடைக்கப் பட்டதனை காரணம்  காட்டி ஹக்கீம் சொன்னதற்காக பிரதேச சபையும், மாகாண சபையும் பெற்றுக் கொடுத்து பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்தீர்கள். ஹக்கீம் சொன்னதற்காக ஜனாதிபதிதேர்தல்களில் ரணில் விக்ரமசிங்கவிற்கும், சரத்பொன்சேக்காவிற்கும் வாக்களித்தீர்கள். அவர் சொன்னதற்காக அனைத்தையும் செய்தீர்கள்.

கடந்த அரசாங்கத்தில் இனவாதிகள் அட்டகாசங்கள் தலைவிரித்தாடிய போது அச்சப்படாமல் எமது மக்களுக்கு கணிசமான உதவிகளை செய்தோம். இவ்வாறிருந்த போதும் தம்புள்ளை, தெஹிவளை, பொறல்ல, கிறேண்ட்பாஸ் போன்ற பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போதும் மற்றும் மஹியங்கனைப்  பள்ளிவாசலில் பன்றி இறைச்சியை வீசிய போதும், முஸ்லீம்களின் வியாபார நிலையங்கள் எரியூட்டப்பட்ட போதும் அங்கும் ஓடினோம். இவ்வாறு  எமது மார்க்கமும், எமது சமூகமும் தாக்கப்பட்ட போதெல்லாம் முதல் மனிதனான ஓடிச்சென்று மக்களை பாதுகாத்தோம்.

மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும் பதுங்கு கிளிகளாக இருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இங்கு வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களைப் பற்றி முழு உலகுமே இப்போது பேசுகின்றது. அந்த வகையில் மு.கா வின் தயவில் உள்ள கிழக்கு மாகாண சபையையும், அதன் முதலமைச்சரையும் பற்றி  எங்காவது பேசப்படுகின்றதா?

எனவே என்ன நோக்கத்திற்காக மறைந்த தலைவரினால் மு.கா ஆராம்பிக்கப்பட்டதோ அது தற்போது பாதை மாறிச்செல்கின்றது. எனவே இவைகளை நிபர்த்தி செய்வதற்காகவும் மக்களின் உரிமைகளையும் அவர்களின் நோக்கங்களையும் அணுவளவேனும் பிசகாமல் பெற்றுக்கொடுப்பதற்காக  அனைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசை ஆதரிக்க முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

5 comments:

  1. So that much you had friendship & tight with Mahinda & Co....
    What about now...??? any connection...?

    ReplyDelete
  2. அது ஏன் தெரியுமா அமைச்சரே மு.கா ஐ வௌியே போகச் சொன்னதும் உங்களை ஆரக்கட்டித் தழுவியதும் - ஒரு கதை சொல்லட்டுமா நான் ?

    அமைச்சரே நீங்கள் ஒரு திறமைசாலி - ஒத்துக்கொள்கின்றோம்.

    ஒரு முறை (ஆன்டு ஞாபகம் இல்லை) பாராளுமன்றத்தில் மகிந்தவின் தலை போகின்ற நிலை. நீங்களோ மு.கா எம்பி. யாருமே எதிர்பாரா வண்ணம் தனிப்பட்டு மகிந்தவிடம் ஒப்பந்தம் அடித்தீர்கள். வாக்கெடுப்பில் உங்கள் வாக்கை துரோகத்தனமாக தனியே மகந்தவிக்கு அளித்தீர்கள். மகிந்த தப்பித்துப் பிழைத்தார். வாக்கெடுப்பில் வென்றார்.

    ஆனால் அந்த நன்றிக்கடனை மகிந்த தனது வாழ்நாளில் என்றுமே மறந்தது கிடையாது. அதுதான் நீங்கள் மகிந்த வீட்டு செல்லப் பிள்ளையானீர்கள். அதுதான் உங்களுக்கு மகிந்தவினால் அமைச்சுப் பதவிகள் அவ்வப்போது வளங்கப்பட்டன. நீங்களும் திறமைசாலி. சந்தர்பங்களை பயன்ன்படுத்தத் தவறவில்லை. உங்கள் திறமையைப் பார்த்து வியந்த மகிந்த அன் கொம்பனி உங்களிடம் மு.கா ஐ அழிக்கின்ற கொன்றக்ககையும் வளங்கியது. அதனை இதுவரையில் மிகக்கச்சிதமாவே நீங்கள் செய்துவந்தீர்கள். அசந்மந்தப் போக்குக்கொன்ட ஹகீமின் மு.கா தலமைத்துவம் இதற்கு உங்களுக்கு நன்றாகவே சந்தந்ப்பங்களை வளங்கியது.

    கடைசியில் முஸ்லீம்கள் ஒட்டுமொத்தமாக மகிந்தவைக் கைவிட்டு ஒதுங்கியபோது - ஹூனைஸ் ரணில் அணியில் சேர்வதில் முந்திக்கொள்ள - மு.கா உம் அந்த அணியுடன் சேர்வதற்கு நிர்பந்திக்கப்பட - அதனையும் முந்திக்கொன்டு - திடீர்திப்பென ஹிஸ்புல்லாவுக்கூட சொல்லிக்கொள்ளாமல் ரணில் அணியுடன் நீங்கள் இணைந்து ஹூனைசை ஓரம்கட்டும் வேலைகளைச் செய்தீர்கள்.

    உங்களிடம் இருந்த - கொள்ளையடித்த கோடிகள் இந்தத் தருணத்தில் மிக நன்றாகவே இதற்கு உதவி செய்தது. பாவம் ஹூனைஸ் வந்த இடம் திரும்ப வேன்டியதாகிவிட்டது.

    மகிந்தவின் கொன்றக்கில் மு.கா அழித்து வந்த உங்களுக்கு அடித்தது மற்றொரு அதிஷ்டம் - மு.கா அதிருப்திக் குழுவை ஒன்று திரட்டி - மகிந்த மாமாவை நீங்கள் விட்டு வந்தாலும் அவர் தந்த ஒப்பந்தத்தை மிக மிகக் கச்சிதமாக இப்போது செய்து வருகின்றீர்கள்.

    ஒரு வேளை நீங்கள் வெல்லலாம் - ஆனால் இலங்கை முஸ்லீம்களை பிரித்து நாசமக்கிய - அந்த நாசகார வேலையை செய்ததற்கு ஒருநாள் நீங்கள் விலைகொடுத்தே ஆகவேன்டும்.

    நிஜங்கள் என்றும் அழிவதுமில்லை அழிக்கப்படவும் முடியாது. பெறுத்திருந்து பார்ப்போம் - இன்சா அல்லாஹ்

    ReplyDelete
  3. அப்படியானால் ஹக்கீம் நானா இந்த முஸ்லிம் சமூகத்தை பகடைக்காயாக பயன்படுத்தி ஆடும் ஆட்டத்தயெலாம் தட்டிக்கேட்க யாரிருக்கா

    ReplyDelete
  4. Min. Rizad, மிக மிக சரியாக சொன்னீர்கள், ஆனால் ஒரு திருத்தம் ரிசாத் திறமை சாலி, என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் எப்படி யானவர் என்பதை பதிவு செய்தால் சில நேரம் Jaffna Muslim ( மக்கள் காங்கிரஸ் ஜமீல் அவர்களின் கருத்துக்கு ஒரு பதிவை செய்தோம் அதை இத்த வரை பின்னூடலில் இடம் பெற வில்லை...????? ) இந்த பதிவை வெளியிடாது என்பதால் தவிர்த்துக் கொள்கிறோம். Jaffna Muslim முஸ்லிம்களின் அரசியல், சமூக செய்திகளுக்கு நடுநிலையாகவும் உண்மையாகவும் மாபெரும் சேவை செய்கிறது என்பது எங்களது நபிக்கையாகும். அதை தொடர்ந்தும் பேணும் என நம்புகிறோம்.

    ReplyDelete
  5. please ask for votes but do not try to justify your stay behind mahinda even after killings in aluthgama. there are many things you have to learn from tamil national alliance. same advice to all our muslim ministers including rauf hakeem.

    ReplyDelete

Powered by Blogger.