Header Ads



வசீம் தாஜுத்தின் படுகொலை, தொடர்பில் மேலும் பல புதிய தகவல்கள்

இலங்கையின் பிரபல வாசிம் தாஜூடீனின் உடல் தடயவியல் பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்படவுள்ள நிலையில் அவரது படுகொலை குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரக்பி வீரர் சித்திரவதை செய்யப்படுவதை அவரது காதலியை தொலைபேசியில் கேட்க செய்த பின்னரே அவரை கொலைகாரர்கள் படுகொலை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட படுகொலை தொடர்பான விசாரணையின்போது வாசிம் தாஜூடீனின் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டார் என்பது குறித்த பயங்கரமான விபரங்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கபடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரக்பி வீரரின் முன்னாள் காதலியிடம் குற்றப்புலானய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த படுகொலை குறித்த விபரங்களை மூடி மறைப்பதற்காக அவரிற்கு வெளிநாட்டு தூதரகமொன்றில் சிறிது காலம் இராஜதந்திர பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனினும் இவ்வருட ஆரம்பத்தில் மகிந்தராஜபக்சவின் தேர்தல் தோல்வியை தொடர்ந்து வெளிநாட்டு தூதரகங்களில அரசியல் நிமயனம் பெற்றவர்கள் திருப்பி அழைக்கப்பட்டவேளை அவரும் அழைக்கப்பட்டுள்ளார்.

மிகவும் பிரபலமான குடும்பத்தை சேர்ந்த நபர் ஓருவரின் பொறமையே ரக்பி வீரர் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டு படுகொலைசெய்யப்பட்டதற்கான காரணம் எனபொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் படுகொலையை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த மூவரே மேற்கொண்டதாக அமைச்சர் ராஜிதசேனரத்தின தெரிவித்துள்ளார்.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு சொந்தமான வாகனமென்றிலேயே ரக்பி வீரர் கடத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை செஞ்சிலுவை தலைவர் ஜகத் அபயசிங்க இது குறித்துமௌனமாக உள்ள அதேவேளை இது குறித்து பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்ட வாகனத்தை முன்னாள் முதற்பெண்மணியின் அரசசார்பற்ற அமைப்பிற்கு வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

4 comments:

  1. கொலை செய்த முன்னால் ஜனாதிபதியின் மகன் யோஷித்த கைது செய்யப்பட வேண்டும் அதியுயர் தண்டனையான மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும். யா அல்லாஹ் கொலைக்காரனையும் அவன் குடும்பத்தையும் அடியோடு தடம் தெரியாத அளவுக்கு அழித்துவிடுவாயாக…!

    ReplyDelete
  2. spell mistakes please do neet full

    ReplyDelete
  3. ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை விசாரணை முடியும் வரை யோசித்த ராஜ பக்சாவை விளக்க மறியலில் வைக்க வேண்டும் .

    ReplyDelete

Powered by Blogger.