Header Ads



'மைத்திரியுடன் நெருங்கிய உறவுள்ளது, பிரதமராக நியமிக்கப்படுவேனா என பொறுத்திருந்து பாருங்கள்' - மகிந்த

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒரபோதும் தான் இணங்கப் போவதில்லை என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

பிரிக்கப்படாத இலங்கைக்குள் சகல மக்களுக்கும் சமமான உரிமையினை வழங்க இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கம் தனக்கு ஏற்ற வகையில் தனியார் மற்றும் அரச ஊடகங்களை வசியப்படுத்தி வைத்திருப்பதாகவும் மகிந்த குற்றம் சுமத்தியுள்ளார். 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 117 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தான் நெருங்கிய உறவு கொண்டுள்ளதாகவும் தேர்தலின் பின்னர் பிரதமராக தான் நியமிக்கப்படுவரா என்பதை பொறுத்திருந்து பார்க்குமாறும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.