உங்கள் வாக்கு யாருக்கு..?
தேர்தல் நெருங்கி வரும் இத்தருணத்தில் பல கட்சிக்காரர்களும் உங்களைத் தேடி வந்திருப்பர். அனைவரும் இஸ்லாத்தையும் சமூக நலனையும் அக்கறையையும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபணமாக உங்கள் முன் வைத்திருப்பர். நீங்களும் அவர்களில் உங்களுக்கு மிக நெருக்கமான அல்லது நம்பிக்கையுள்ள அல்லது நமது பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாக்களிக்கலாம் என்று உறுதி கொண்டிருப்பீர்கள்.
எனினும் எமது வாக்குகள் பற்றி எமது உயிரிலும் மேலான இஸ்லாம் என்ன சொல்கின்றது என்று சிந்தித்தோமா?
உண்மையில் எமது வாக்குரிமை ஒரு அமானிதமாகும். அல்லது சாட்சி பகருதலாகும். அமானிதமோ, சாட்சியமோ எப்படி இருப்பினும் இவ்விரண்டும் மகா விஷேடமான இரு அம்சங்கள். அமானிதத்தை சரியாக அதற்குரிய தகுதியுள்ளவரகக்கு ஒப்படைத்தீர்களா? என்று அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான். அல்லது நீங்கள் பகர்ந்த சாட்சியத்தை உள்ளா உள்ளபடி பகர்ந்தீர்களா? என்பது மற்றுமொரு கேள்வி.
இவ்விரு கேள்விகளும் இன்றிமையாதவைகள்ளூ அது பள்ளிவாசல் நிர்வாகமாயினும் சரியே. அமானிதமான உங்களது வாக்குரிமையை பால்படுத்துவதானது மறுமையின் அடையாளங்களில் ஒன்று. பொய்ச்சத்தியமும் பொய்யான சாட்சியமும் எவரிடம் உள்ளனவோ அவரது நோன்பு அல்லாஹ்விற்குத் தேவையற்றதாகும்ளூ அவர் அவ்விரு பாவங்களையும் தவிர்ந்து கொள்வதற்கே நோன்பு என்ற மகத்தான கடமை கூட விதியாக்கபட்டது.
புறம் பேசுவதும் குறை சொல்லித் திரிவதும் எதிர் தரப்பினரை இழிவு படுத்துவதும் திட்டுவதும் சபிப்பதும் இக்காலங்களில் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டனளூ இவற்றை தேர்தல் காலங்களில் ஹலாலாக்கியது யார்? அல்லாஹ்வால் ஹராமாக்கப்பட்டுள்ள இவற்றை மேடை போட்டு பேசுவதற்கும் அவற்றை கரவோசத்துடன் வரவேற்பதற்கும் அனுமதித்தது யாh?
இஸ்லாம் அனுமதிக்காத மற்றுமொரு பாவச் செயல், பிரதேசவாதமாகும்ளூ எமது பிரதேசத்தைச் சார்ந்தவருக்கே எமது வாக்குகள் என்பது அது. இது ஜாஹிய்யாக் காலத்து மனிதர்களின் பண்பாகும். உண்மை, நேர்மை, தொழுகை, இறையுணர்வு, நிர்வாகத் திறமை போன்ற தன்மைகள் உள்ளனவா என்று பார்க்கவேண்டும் தவிர, பிரதேசம், குடும்பம், நட்பு இவையெல்லாம் இவ்விடத்தில் முதன்மைப்படுத்துவதானது, நாம் இன்னும் ஜாஹிலிய்யத்தில் இருந்து விடுபடவில்லை என்பதையே உணர்த்துகின்றது.
ஒரு இறைவிசுவாசி என்றும் ஒரு முகங்காட்டும் குணமுடையவனாகவே இருக்க வேண்டும்ளூ இரு முகங்கள் காட்டுபவனாக இருக்க முடியாது. .வர் வந்தால் இவருக்கும் நல்ல முகம்ளூ மற்றவர் வந்தால் அவருக்கும் அதே முகம் என்று இரட்டை முகமுடையவனாக இருக்க மாட்டான். (அபூ தாவூத்).
இறைவிசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்ளூ என்றும் உண்மையாளர்களுடனேயே இருந்து கொள்ளுங்கள (ஸூரா அத்தவ்பா : 119).
வெளிநாடுகளில் அல்லது மண்ணரையில் வாழ்வோரது வாக்குகளை திருட்டுத் தனமாக வாக்களித்தல், பிறரை வாக்களிக்காது தடுத்தல், வாக்குகளை பறித்தல் அல்லது விற்றல், வாங்குதல் ஆகியன ஷரீஆவின் பார்வையில் பெரும்பாவங்களாகும்.
ஆட்சியில் ஒருவரை அமர்த்துவதும் நீக்குவதும் அல்லாஹ்வின் செயலாகும். அதற்கு பொது மக்களின் வாக்குரிமை ஒரு காரணமாக அமைந்துள்ளது. வேட்பாளர்கள் மக்களது வாக்குகளை மாத்திரம் முழு நம்பிக்கை வைக்காது அல்லாஹ்விடமும் இதில் நலவிருந்தால் என்னைத் தெரிவு செய்துவிடு, நலவில்லையாயின் இதில் இருந்து என்னை நீக்கி விடு என்று துஆச் செய்து கொள்ள வேண்டும். வீணான பொய் வாந்திகளையும் வாக்குறுதிகளையும் பரப்பக் கூடாது.
எமக்கு விசுவாசமில்லாத ஒருவரைத் தடுத்தல், அவரது மேடைக்கு கல்லெறிதல், குழப்புதல், கூச்சலிடுதல் போன்றன இஸ்லாம் கற்றுத்தராத அநாகரிகமாக பண்புகளாகும்.
வாக்களிக்கு முன்னர் ஒரு கனம் அல்லாஹ்விடம் 'இஸ்திகாரா' செய்து கொள்வதுடன், 'தவ்பா', 'இஸ்திஃபார்'களிலும் அதிகமாக ஈடுபடுவதுடன், பொறுத்தமான அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதி கொள்ளுங்கள். அமானிதத்தை அதற்குரிய தகுதியும் திறமையும் உடையவர்களுக்கு வாக்களியுங்கள். அல்லாஹ்விடம் தப்பிக் கொள்ளலாம்.
இன்ஷா அல்லாஹ்.
இப்பொழுது சிந்தியுங்கள் உங்கள் வாக்கு யாருக்கென்று.
Post a Comment