Header Ads



மகிந்த ராஜபக்ஷ, எந்த நல்லதையும் செய்யவில்லை - ரணில்


கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருந்து மகிந்தராஜபக்ஷ எந்த நல்லதையும் செய்யவில்லை. இனி அவர் எதனை செய்வதற்காக தேர்தலில் போட்டியிடுகிறார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஹம்பாந்தொட்டையை மறந்து தற்போது குருனாகலையில் சென்று தேர்தலில் போட்டியிடுகிறார். இவ்வாறான ஒரு தலைவரால் நாட்டை சீராக ஆட்சி செய்ய முடியாது.

ஆனால் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர், இலங்கையில் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இனி தொழில்வாய்ப்புகள் அதிகரிக்கவும், ஏற்கனவே தொழிலில் இருப்பவர்களின் வேதனங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளில் இருந்து அதிக அளவான முதலீடுகள் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.