அபாபீல்களை அழைத்துவா...! ஆப்ரஹாக்கள் ஒழியட்டும்..!!
-அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகம்-
ஓகஸ்ட் 17 நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக அமையப் போகிறது. நாட்டின் ஜனநாயகத்தையும் சிறுபான்மைகளின் இருப்பபையும் அவர்களின் எதிர்காலத்தையும் தீர்க்கமாக தீர்மானிக்கப் போகும் இத்தேர்தல் இலங்கை முஸ்லிம் சிறுபான்மை சமூகமான எம்மைப் பொருத்தமட்டில் பல விதங்களில் முக்கியத்துவம் பெருகிறது.
ஏதிர்வரும் பாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம், புதிய அரசியல் சட்டங்கள், புதிய ஆட்சி மற்றும் தேர்தல் முறை என்பன போன்ற சிறுபான்மைகளோடு நேரடியாக தொடர்புபடக்கூடிய விடயங்;கள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன. எனவே இந்த விவகாரங்களில் அறிவுபூர்வமாக சிந்திக்ககூடியவர்களே எமது சமூகத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தேவைப்படுகிறார்கள். முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கூடிய சமூகத்தின் மீது பற்றுள்ள நடுநிலை சிந்தனையுள்ள தேசிய விவகாரங்களில் அக்கரையுள்ள பிரதிநிதிகளை தெரிவுசெய்வது இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் முதன்மையான கடமையாகும்.
ஏதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாhதிபதித் தேர்தலின் மூலம் தேசத்தில் மலர்ந்த நல்லாட்சி என்ற எண்ணக்கரு பல சிக்கலான கட்டங்களை சந்திக்கவுள்ளது. நல்லாட்சி என்ற சொல்லும் அதன் உண்மையான அர்த்தத்தை விட்டும் துஷ்;பிரயோகம் செய்யப்படலாம் என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை எட்டாது தோல்வியைத் தழுவிய மஹிந்த ராஜபக்ஷ அடிபட்ட பாம்பாக மீண்டும் விஷ்;வரூபம் எடுத்துள்ளார். இந்த நிலையில் பறிபோன ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சிங்கள மக்கள் மத்தியில் இனவாதக்கருத்துக்களை பரப்பி வருகின்றார். குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மை சமூகத்தின் பாதுகாவலனாக தன்னனை அடையாளப்படுத்த மீண்டும் களம் அமைக்கிறார்.
ஏதிர்வரும் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ என்ற கதாப்பாத்திரம் எவ்வாறான பங்கை வகிக்கும் என்பது பற்றி சிந்;திக்கவேண்டியுள்ளது. இது எமது எதிர்காலம் குறித்த பல கேள்விக்கணைகளை எம்மை நோக்கி எழுப்புகிறது. கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம்கள் மீது தொடுக்கப்பட்ட இன நெருக்குதல்களை கண்டு மௌன அனுமதி வழங்கிய பிரதிநிதிகள் குறித்து தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கவேண்டிய ஒரு கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
இந் நிலையில் முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடென்ன? தனது சமூகம் எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் நாம் வாக்களித்து அனுப்பும் பிரதிநிதி எப்படி களத்தில் செயற்படப் போகிறார்? ஆவர் சமூகத்தின் சார்பாக அவர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்து செயற்படுவாரா? என்பது பற்றி சிந்திக்கவேண்டியுள்ளது.
இன்று தேர்தல் களத்தில் பழைய புதிய முகங்கள் குதித்துள்ளன. இவர்கள் தமது தேர்தல் பிரசாரங்களில் பேசும் கருத்துக்கள்தான் என்ன? இந்த முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்று அவர்;களுக்காக செய்த பணிகள்தான் என்ன?
ஒவ்வொரு முறையும் தேர்தல் மேடைகளில் முழங்கும் வீர வசனங்களும் பிறரைப் பற்றி கொட்டித் தீர்க்கும் பழி தீர்க்கும் படலமும் வாக்குகளை கொள்ளை அடிப்பதற்காக பாமர மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளும் தேர்தல் காலம் முடிந்த பிறகு காற்றோடு காற்றாய் பறந்து போகும் பாரம்பரியம் எப்போதுதான் ஒழிவது?
உண்மையான ஒரு வேற்பாளர் தனது சக வேற்பாளரின் பலவீனத்தைக் கூறி பிரசாரம் செய்யமாட்டார். மாறாக தன் பலத்தையும் கொள்கைகளையும் தனது எதிர்கால திட்டங்களையும் முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவூட்டியே தனது பிரசாரத்தை மேற்கொள்வார்.
வெறும் அரிசி மூடைக்கும் ஆயிரம் பத்தாயிரத்துக்கும் விலைபோய் தமது வாக்குகளை விற்றுப் பிழைப்பு நடத்தும் கத்தரிக்காய் வியாபார அரசியல் கலாசாரம் எப்போதுதான் மாறுவது? இது குறித்து மக்களுக்கு விழிப்பூட்டவேண்டிய சிவில் அமைப்புகள் புத்திஜீவிகள் இஸ்லாமிய இயக்கங்கள் மௌனமாக இருப்பது வேதனை அளிக்கிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது யாருக்கு வாக்களிப்பது என்பதில் தெளிவான முடிவொன்றை முன்கூட்டியே எம்மால் எடுக்கமுடியுமாயிருந்தது. தேசியமட்டத்தில் நிலவிய அராஜகங்களை அக்கிரமங்களை முடிவுக்கு கொண்டு வரவும் முஸ்லிம்களுக்கும் ஏனைய நாட்டு மக்களுக்கும் பாதிப்பாக அமைந்த ஆட்சி முறையை மாற்றுவதற்கு ஒரே நோக்கோடு கட்சி முரண்பாடுகளுக்கும் பிரதேச வேறுபாடுகளுக்கும் அப்பால் நின்று அறிவுபூர்வமாக தேசிய அளவில் செயற்பட்டதைப் போன்று சமூகத்திற்குள்ளும் அரசியல் மாற்றம் ஒன்றைச் செய்வதற்கு முஸ்லிம் வாக்காளர்கள் முன்வரவேண்டியுள்ளது.
மஷிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு காரணங்களாக அமைந்தவை முஸ்லிம் சமூகத்திலுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கான நியாயங்களாகவும் தற்போது உள்ளன. உதாரணமாக ஊழல், மோசடி, குடும்ப அரசியல், சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தல், வன்முறை அரசியல் கலாசாரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்;.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட நல்லாட்சி வெற்றியை காப்பாற்ற வேண்டுமாயின் அதே தூர நோக்குடன் சமூக நலனை முன்னிறுத்தி தங்களது வாக்குகளைப் பயன்படுத்த முஸ்லிம் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். ஊர்க்காரன் உறவுக்காரன் கட்சிக்காரன் என்ற குறுகிய மனப்பான்மைகளிலிருந்து விடுபட்டு தரமான பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். மக்களின் வாக்குகளைப் பெற்று வயி;ற்று பிழைப்பு நடத்தக் கூடிய ஆப்ரஹாக்களை ஒழிக்கும் அபாபீல்களாக எமது வாக்குப் பலம் அமைய வேண்டும்
Islamic University of Medina - did not teach him that voting for kufr system is Shirk.
ReplyDeleteYaar vanthalum muslimgal backround kasu pNam
ReplyDelete