Header Ads



சட்ட வைத்திய அதிகாரிகளின் பொறுப்பில் வசீம் தஜூடினின் ஜனாஸா

றக்பி வீரர் மொஹமட் வசீம் தஜூடினின் சடலம் விசாரணைகளுக்காக இன்று தோண்டியெடுக்கப்பட்டது.

கல்கிஸ்ஸ மேலதிக நீதவான் மற்றும் மாவட்ட நீதவான் பிரஹர்ஷா ரணசிங்க மற்றும் கொழும்பு பிரதான சட்ட வைத்தியதிகாரி ஆகியோரின் முன்னிலையில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

வசீம் தஜூடினினுடையது தானா என வினவப்பட்ட போது அதற்குப் பதிலளித்த வைத்திய அதிகாரி சடலம் புதைக்கப்பட்ட இடமானது குடும்ப உறுப்பினர்களாலேயே அடையாளம் காணப்பட்டது. தேவைப்பாட்டால் பின்னர் அதனை உறுதிப்படுத்த பரிசோதனை செய்யலாம் எனத் தெரிவித்தார்.

மோட்டார் வாகனமொன்றிற்குள் எரியூட்டப்பட்ட நிலையில் றக்பி வீரர் வசீம் தஜூடினின் சடலம் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி நாரஹென்பிட்ட ஷாலிகா மைதானத்திற்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது.

சுவர் ஒன்றில் மோதிய தஜூடீனின் வாகனம் பின்னர் தீப்பிடித்துள்ளதாக பொலிசார் சந்தேகம் வெளியிட்டனர்.

அதன் பின்னர், அவருடையது என சந்தேகிக்கப்படும் பணப்பை சம்பவ இடத்திலிருந்து சற்று தொலைவில் மீட்கப்பட்டது.

இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பித்ததை அடுத்து சடலத்தை தோண்டி எடுக்க நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதே வேளை வசீம் தாஜூடினின் சடலத்தை கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில் அங்கு சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

No comments

Powered by Blogger.