Header Ads



முஜீபுா் றஹ்மான் பிரசார செயலணி, விடுத்துள்ள அறிக்கை

நேற்று சனிக்கிழமை கொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும் கொழும்பு மத்திய தொகுதி ஐதேக அமைப்பாளருமான முஜீபுா் றஹ்மானின் தோ்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட துரதிஷ்ட வசமான சம்பவம் ஜனநாயகத்தை விரும்பும் மக்களின் மனதில் வேதனையை தோற்றுவித்திருக்கிறது. முஜீபுா் றஹ்மானுக்கு கொழும்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தோ்தலில் போட்டியிட ஐதேக தலைமைப்பீடத்தால் அங்கீகாரம் கிடைத்த நாளிலிருந்து, கடந்த மாகாண சபை தோ்தலில் ஒன்றாக ஒற்றுமையாக செயற்பட்ட இந்த  இருவருக்கும் இடையில் விரிசல்கள் ஏற்பட்டன.

2015 பாராளுமன்ற தோ்தலில் போட்டியிட தனக்கு தான் சந்தா்ப்பம் கிடைக்கும் என நம்பியிருந்த பைரூஸ் ஹாஜி,  கொழும்பு முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரம் செய்திருந்தாா். ஆனால் இறுதி நேரத்தில் ஐதேக தலைமை, முஜீபுா் றஹ்மானை பாராளுமன்ற தோ்தலுக்கு வேட்பாளராக தொிவு செய்தது.   கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பிரபலம் பெற்ற அரசியல் செயற்பாட்டளராக தன்னை தடம் பதித்துக் கொண்டவரே முஜீபுா் றஹ்மான். அவரின் அரசியல் அறிவும், தூர நோக்கும், துணிவும், அவரது பேச்சாற்றலும் அவரை கொழும்பு மாவட்டத்தின் வேட்பாளராகும் தகுதியை அவருக்கு கொடுத்தது. 

முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படும் போது, முஸ்லிம் சமூகம் சாா்ந்த பிரச்சினைகளில் தனது உயிரை கூட பொருட்படுத்தாது அராஜக சக்திகளுக்கு எதிராக  போராடும் அவரது போராட்டக் குணம் அவருக்கு சமூகத்தில் மதிப்பையும் நம்பிக்கையையும்,  அந்தஸ்தையும் வழங்கியிருந்தது.  இதை அறிந்தே ஐதேக தலைமைத்துவம், கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின்  பாராளுமன்ற  பிரதிநிதித்துவத்தை  வகிப்பதற்கு ஏற்ற பொருத்தமான ஒருவராக முஜீபுா் றஹ்மானை அடையாளம் கண்டு வேட்பாளராக தெரிவு செய்த்து.   அன்று  ஐதேகட்சி,  முஜீபுா் றஹ்மானை வேட்பாளராக தொிவு செய்ததை அறிந்த பைரூஸ் ஹாஜி தனது பாராளுமன்ற கனவு கலைந்து போனதை அறிந்து கவலையும் கடுப்பும் அடைந்தாா். தன்னை வேட்பாளராக நிறுத்தாமல் முஜீபுா் றஹ்மானை வேட்பாளராக நிறுத்திய, தலைவா் ரணில் விக்கிரமங்கவின் தலைமைத்துவத்தில் இயங்கும் கட்சியின் முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்தார்  பைரூஸ் ஹாஜி.   

தன்னை நிராகாித்த, தனது கனவுகளை இல்லாதொழித்த கட்சியின் தலைமைத்துவத்தோடுதான்  முரண்பட்ட பைரூஸ் ஹாஜி கோபத்தில் கட்சியை விமர்சித்து திரிந்தார்.  முஜீபுர் ரஹ்மான் விடயத்தில் கட்சி தவறான  முடிவை எடுத்திருந்தால் கட்சியின் தலைமைத்துவத்தோடு சண்டை போட்டு, அவர் பாராளுமன்ற தோ்தலுக்கு போட்டியிட தனக்குள்ள தகுதியை நிரூபித்திருக்க வேண்டும். ஐதேக தலைமைத்துவத்தோடு போராடியிரக்க வேண்டும். ஆனால் மாறாக அவா் வேட்பாளராக கட்சியால் நியமிக்கப்பட்ட முஜீபுா் றஹ்மானோடு தனது வஞ்சத்தை தீா்த்துக்கொள்ள முன்வந்தார். அதன் பிரதிபலன் அவரை இன்று  முஜீபுர் றஹ்மான் மீது  பழி தீா்க்கும் மன நிலைக்கு  தள்ளியிருக்கிறது.

நேற்று புதுக்கடையில் நடைபெற்ற சம்பவத்திற்கு அல்லாஹ்வும், இரண்டாவதாக புதுக்கடை மக்களும் சாட்சிகளாக இருக்கின்றாா்கள்.  தனது பிரதேசத்திற்கு தோ்தல் பிரசாரத்திற்கு வரும் முஜீபுா் றஹ்மான் மீது வஞ்சம் தீா்க்க காத்துக்கொண்டிருந்த பைரூஸ் ஹாஜி அதற்கான சகல ஏற்பாடுகளுடனும் இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அந்த பிரதேசத்தில்  கடைகள் ஏற்கனவே திட்டமிட்டு மூடப்பட்டிருந்தன.  அசம்பாவிதங்களை தோற்றுவிப்பதன் மூலம் முஜீபுா் றஹ்மானின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வேலைத்திட்டம் ஏற்கனவே அரங்கேற்ப்பட்டிருந்ததை உணரக் கூடியதாக இருந்த்து. பிரசார நடவடிக்கையின் போது பொலிஸ் மற்றும் உளவு பிாிவினாின் செயற்பாடுகளில் கடுமையாக இருந்தன.

முஜீபுா் றஹ்மான் மற்றும் ஆதரவாளா்களின் ஒவ்வொரு நகா்வும் பொலிஸ் மற்றும் உளவுப்பிாினரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. பொலிஸாாின் இந்த செயற்பாட்டை பலா் எதிா்த்தனா். ஜனநாயக ரீதியிலான எங்கள் நடவடிக்கைகளை ஏன் வீடியோ கமராக்களால் ஒளிப்பதிவு செய்கின்றீா்கள் என பலா் பொலிஸாரை  விசாரித்தனா். என்றாலும் பொலிஸாரின் கடமைகளை செய்வதற்கு அவா்களுக்கு அனுமதியளிக்குமாறு தனது ஆதரவாளா்களை வேண்டிக்கொண்ட முஜீபுா் றஹ்மான் தனது பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டாா்.  

புதுக்கடை பைரூஸ் ஹாஜியாாின் காாியாலயம் முன்பாக சுமாா் இருபதுக்கும் அதிகமான ஆயுதம் தாித்த பொலிஸாா் மற்றும் உளவுப்பிாினா் புடைசூழ இருந்தனர். வீடியோ கமெராக்களோடு சுமாா் ஐந்துக்கும் மேற்பட்ட பொலிஸாரும், உளவுப் பிாிவினரும் செயற்பட்டுக்கொண்டிருந்ததன் பின்னணியில் இரகசியம் எங்களுக்கு துலங்க அதிக நேரம் எடுக்கவில்லை.   முஜீபுா் றஹ்மானின் ஆதரவாளா்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பைரூஸ் தரப்பில் செய்யப்பட்ட முறைப்பட்டை அடுத்த இத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டதாக அறிய கிடைத்தது.

தோ்தல் காலத்தில் தனது கட்சியைச் சோ்ந்த ஒருவரோடு சண்டையிட்டு , அதுவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவாின் காாியாலயமாக செயற்படுவதாக சொல்லிக் கொள்ளும் ஒரு காாியாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தி தனது அரசியல் அந்தஸ்தை இல்லாமலாக்கிக் கொள்ளும் அரசியல் மந்தபுத்தியுள்ள மனிதன் முஜீபுா் றஹ்மான் இல்லை. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மூன்றாம் தர அரசியல் வேலைகளை செய்வதற்கு அவருக்கு அவசியம் இல்லை என்ற நிலையில்  அவர் மிகவும் நிதானமாக செயற்பட்டதற்கு  புதுக்கடை மக்களே சாட்சி பகர்வாகள்.   ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க முஜீபுர் றஹ்மான் மீது நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருப்பவர். பைரூஸ் கூறுவது போல் அந்த தலைவரின் காரியாலயத்தை எப்படி முஜீபுர் றஹ்மான் தாக்குவார்?  அறிவுள்ள, புத்தியுள்ள ஒரு மனிதன் அப்படியான காரியத்தில் ஈடுபடுவானா?    

அப்படி கட்சித் தலைவாின் காாியாலயம் தாக்கப்பட்டிருந்தால் அதற்கான சரியாக ஆதாரங்களை பைரூஸ் முன்வைக்க வேண்டும். முஜீபுர் றஹ்மான் அப்படி செய்தார்..  இப்படி செய்தார் என்று  வாயில் வந்ததை சொல்வதற்கு  இது என்ன வெங்காய , கிழங்கு சில்லறை வியாபாரம் அல்லவே.  பொய்யையும், களவையும்  பிடித்துக் கொடுக்கும் சாதனமாக சிசிரிவி கெமராக்கள்  மாறி இருப்பதை  பைரூஸ் மறந்தே போய்விட்டார்.  அவரின் அலுவலகம் தாக்கப்பட்டிரந்தால் பைரூஸின் பாதுகாப்புப்பாக குவிக்கப்பட்டிருந்த வாழைத்தோட்ட ஆயுதம் தாித்த பொலிஸார் என்ன செய்துக் கொண்டிருந்தாா்கள் ?  உளவுப்பாிவினர் அந்த காட்சிகளை படமாக்கியிருப்பாா்களே?  அதுவும் நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவாின் கட்அவுட்களை  அழித்தால், சிதைத்தால் பொலிஸாா் சும்மா பாா்த்துக் கொண்டிருப்பாா்களா? ஒவ்வொரு அசைவுகளையும் அவதானித்து வீடியோவாக பதிவு செய்த பொலிஸாரும் , உளவுப் பிரிவினரும் அத்தகைய மோசமான  வேலையை ஏன் பதிவு செய்யாமல் விட்டாா்கள்? தகவல் தொழில் நுட்பம் வளா்ந்துள்ள காலத்தில் ஏன் பைரூஸ் ஹாஜி கூட ஐதேக தலைவா் ரணில் அவா்களின் காாியாலயத்திற்கு இழைக்கப்பட்ட நாசத்தை அவரது தொலைபேசியால் படமாக்கி இணையத்தளத்தில், பேஸ்பக்கில் பதிவேற்றம் செய்தீரக்கலாமே?  மாறாக ஏன்  புகைப்படங்களை மட்டும் இணையத்தில் பதிவேற்றியிருக்கிறாா்.    முஜீபுா் றஹ்மான் தனது பிரசார நடவடிக்கையின் போது பைரூஸ் ஹாஜியை சந்தித்து சுமுகமாக கதைக்க முற்பட்டதை  தடுத்த பைரூஸ் ஹாஜி அந்த  சிசிாிவி “காட்சி” யை முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருக்கிறாா். அதற்கு “முஜீபுா் ரஹ்மானின் குண்டா்களுடன் பைரூஸ் ஹாஜியாாின் காாியாலயத்தை தாக்க முனைந்த காணொளி என்று கொச்சைத் தமிழில் தலைப்பும் இட்டிருக்கிறாா். காாியாலயத்தை உடைப்பதான காணொளி யை ஏன் அவா் இன்னும் வெளியிடவில்லை.  

அதுவும்,  தனது காாியாலய கதிரைகளை நிலத்தில் கவிழ்த்து பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவின்  பிரசார பிரசுரங்களை கதிரைக்கு மேலால்  வீசி எறிந்து அதனை புகைப்படமெடுத்து ஆடிய பைரூஸ் ஹாஜியன்  வஞ்சக நாடகம் இப்போது சந்திக்கு வந்திருக்கிறது.  முஜீபுா் றஹ்மான் மீது ஐதேக தலைமைத்துவத்திற்கும் குறிப்பாக தலைவா் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான உறவில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு  இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டிருப்பதை புத்தியுள்ள ஒவ்வொரு மனிதனாலும் புாிந்துக் கொள்ள  முடியும். 

என்றுமில்லாதவாறு  முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக கொழும்பு முஸ்லிம்கள் மத்தியில் தனக்கான ஒரு புத்திசாதுா்யமுள்ள, துணிச்சலுள்ள, அறிவுள்ள ஒரு பிரதிநிதியை இம்முறை பாராளுமன்றத்திற்கு தொிவு செய்ய வேண்டுமென்ற அவாவும், வேட்கையும் மக்கள் மத்தியில் இருக்கிறது. இதனால் முஜீபுா் றஹ்மான் மீதான ஆதரவும் எதிா்பாா்ப்பும் நாளுக்கு நாள் அதிகாித்து வருவதை பொறுத்துக் கொள்ளாத பைரூஸ் ஹாஜி இவ்வாறான கீழ்தரமான அரசியலில் ஈடுபட்டுவருவதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்பதை எதிா்வரும் காலங்களில் அவா் புாிந்துக்கொள்ளத்தான் போகிறாா்.  புதுக்கடை மக்களே இவாின் அநாகாிகமான கீழ்த்தரமான அரசியல் நாடகத்தை பாா்த்து காறி உழிழத் தொடங்கி விட்டாா்கள்.

தோ்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டவுடன் புதுக்கடையில் சுஜீவ சேனசிங்க,  ரவிகருணாநாயக்க போன்ற வேட்பாளா்களுக்காக தனது காாியாலயத்தில் கட்அவுட் படங்களை வைத்து முஜீபா் றஹ்மானுக்கு எதிராக தனது பிரசார பணியை ஆரம்பித்தாா். இதன் போது புதுக்கடை இளைஞா்களின் பலத்த எதிா்ப்புக்கும் இந்த பைரூஸ் ஆளானாா்.  இந்த குற்றச்சாட்டிலிருந்து  மெதுவாக நழுவிய பைரூஸ் ஹாஜி  சுஜீவ, ரவி போன்றோாின் கட்அவுட் களை கழற்றி எரிந்து விட்டு பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவின் கட்அவுட்களை தனது காாியாலயத்தில் ஏற்றினாா். ஐதேக தலைவாின் கட்அவுட்களை காாியாலயத்தில் வைத்தால் தலைவா் ரணிலின் கட்அவுட்டுக்கு  பின்னால் மறைந்து நின்று முஜீபுா் றஹ்மானுக்கு எதிராக தனக்கு வேண்டியவாறு அரசியல் ரீதியாக தாக்குதல் தொடுக்க  முடியும் என்று பைரூஸ் நம்பினாா்.  நேற்று அந்த நாடகத்தையே அவா் மேடையேற்றினாா்.  ரணிலின் காாியாலயம் என்ற போா்வையில் முஜீபுா் றஹ்மானுக்கு எதிராக சதியை வடிவமைத்த பைரூஸ் ஹாஜி, பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து முஜீபுா் றஹ்மானுக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையை “சேற்றுக்குழி” எனும் பெயாில் செயற்படும் ஊடக தா்மம் அறியாத  அவாின் அடிவருடி இணைய தளத்தின் மூலம் ஆரம்பித்திருக்கிறாா். இதன் மூலம் தலைவா் ரணிலக்கும் முஜீபுா் றஹ்மானுக்குமிடையில் முறுகலை ஏற்படுத்தி முஜீபுா் றஹ்மானுக்கு கட்சியில் அவப்பெயரை ஏற்படுத்த முயற்சியும் செய்து வருகிறாா்.

இப்போது முஜீபுா் றஹ்மானின் பெயருக்கு கலங்கம் கற்பிக்கும் விதமாக அவரால் பதிவேற்றப்பட்டிருக்கும் புகைப்படங்கள் போலியானவை அவராலேயே உருவாக்கப்பட்டவை என்பது நிரூபணமாகியிருக்கிறது. முஜீபுா் றஹ்மானின் ஆதரவாளா்களை பாதாள உலகக் கோஷ்டியினராகவும் , மது அருந்தி போதையில் செயற்பட்டவா்களாகவும் சித்தாிக்கும் இணைத்தில் உலாவும் அவரது பேச்சு அவாின் பொறாமையையும்மடைமையையும், அறிவற்ற தனத்தையும், அவாின் சுயஉருவத்தையும் சிறப்பாக காட்டியிருக்கிறது. 

பொலிஸாருக்கு கிடைத்திருக்கும் சீசிாிவி காட்சிகளில்  பைரூஸ் ஹாஜியின் போலி முகம் அம்பலமாகியிருக்கிறது. முஜீபுா் றஹ்மானின் புதுக்கடை காாியாலத்திற்கு அருகில் வந்து, பைரூஸ் ஹாஜியின் மகனும், மருமகனும், சகோதரரும் முஜீபுா் றஹ்மானின் ஆதரவாளா்களை தாக்கும் காணொளி வெளியாகியிருக்கிறது.   புதுக்கடை மக்களின் ஆதரவை இழந்து கதி கலங்கி இருக்கும் பைரூஸ் ஹாஜி தனது உறவினா்களை மட்டும் நம்பியிரக்கம் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாா்.  எனவே இவா்கள் கூறுவது போல பைரூஸ் ஹாஜியின் அதரவாளா்களுக்கும் முஜீபுா் றஹ்மானின் ஆதரவாளா்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் அல்ல. பைரூஸ் ஹாஜிக்கு அதரவாளா்கள் இல்லாத நிலையில் அவாின் குடும்ப குண்டா்கள் பொலிஸ் பாதுகாவலோடு இருந்துக் கொண்டு  முஜீபுா் றஹ்மானின் ஆதரவாளா்களை தாக்கினாா்கள்.  இதில் இரண்டு பெண்கள் காயமுற்றனா். இது தொடா்பாக பொலிஸில் முறைப்பாடு செய்தும் உள்ளனா். 

முஜீபுா் றஹ்மான் பிரசார செயலணி
சாா்பாக
கலீலுா் றஹ்மான்

1 comment:

  1. ஒற்றுமை அவசியம். முஜிபுர் ரஹ்மானும் பைருஸ் ஹாஜியும் இணைந்து செயற்பட்டால் இருவருக்கும் நல்லது முஸ்லிம்களுக்கும் நல்லது. பொறாமை, வஞ்சகம், வகிரமம் போன்றவற்றிலிருந்து இவர்கள் விடுபட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.