தமிழர்கள், முஸ்லீம்களை ஓடுக்குகின்றார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா...?
-அனுபவன் லியோ-
1977 ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்பிரச்சாரத்தின்போது தமிழ் இளைஞர்களை சூடேற்றி அவர்களின் கைகளை பிளேட்டினால் கீற வைத்து அதில் இருந்து வந்த இரத்தத்தால் தமது நெற்றியில் மகிழ்ச்சியுடன் இரத்தப் பொட்டு வாங்கியவர்கள் அந்தத்தருணத்திலேயே அந்த இடத்திலேயே அதனைத்தடுத்திருக்கவேண்டும். படித்தவர்கள் சட்டத்தரணிகள் என்றெல்லாம் அங்கம் வகித்த இவர்கள் அதுமட்டுமல்ல தங்களை அகிம்சாவாதிகளாவும் காட்டிக்கொண்ட இவர்கள் இளைஞர்களுக்கு அறிவுரைகூறி இப்படியான வழிகள் வன்முறைக்கு வித்திடும் என்று கூறி இரத்தப்பொட்டு கலாச்சாரத்தை தடுத்திருந்தால் தமிழர்களின் தலைவிதிமாறியிருக்கும். மாறாக இளைஞர்களுக்கு வழிகாட்டவேண்டியவர்கள் தங்கள் நலனுக்காக வன்முறையை வளர்த்துவிட்டார்கள். அந்த வன்முறைத் தீ இன்னும் அணையவில்லை என்பதை கல்முனைச்சம்பவம் தெளிவாகக்காட்டுகின்றது.
அதுதான் கல்முனையில் முதலியார் காரியப்பர் வீதிப்பெயர்ப்பலகை இரும்பு சம்மட்டி கொண்டு பட்டப்கலில் வெள்ளைச்சேட்டு அகிம்சாவாதிகளினால் பகிரங்கமாக பட்டப்பகலில் படம் எடுத்து உடைக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு வேட்பாளர் கென்றி மகேந்திரன் தலைமையில் இந்த வன்முறை இடம்பெற்றள்ளது.
பொலிசார் நடவடிக்கை எடுக்காததால் இடித்தோம் என்கிறார் கூட்டமைப்பு வேட்பாளர் கென்றி மகேந்திரன். நீதிமன்றம்; ஓன்று என்று ஓன்று இருப்பதை உதாசீனம் செய்து தாங்களே சட்டத்தை கையில் எடுப்பது எந்த வகையில் குறிப்பாக அகிம்சாவாதிகளாக காட்டிக்கொள்பவர்களுக்கு பொருந்தும். சம்பந்தன் போன்றோர் வாயையும் கண்ணையையும் மூடிக்கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.
சிறுபான்மை முஸ்லீம் மக்களை அரவணைத்து செல்லவேண்டும் என்று உதட்டளவில் கூறும் கூட்டமைப்பின் உள்ளத்தில் உள்ளது என்ன?
தமிழ் எங்கள் மொழி இஸ்லாம் எங்கள் வழி என எங்களுடன் ஒன்றாக வாழ்ந்த யாழ்ப்பாண முஸ்லீம் மக்களை விரட்டியடித்தோம் கிழக்கில் பள்ளிவாசல்களில் படுகொலை செய்தோம் அந்த வடுக்கள் இன்னும் மறையவில்லை. வீதிப் பெயர்ப் பிரச்சினைகள் எங்களுக்குள் பேசித்தீர்க்கப்படவேண்டியவை இடித்தது வீதிப் பெயர்ப்பலகையை மட்டும் இல்லை எம் சகோதர இனத்தின் இதயங்களையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
அப்படியென்றால் பெரும்பான்மை சிங்கள இனம் சிறுபான்மைத் தமிழர்களை ஒடுக்குகின்றது. பெரும்பான்மைத் தமிழர்கள் சிறுபான்மை முஸ்லீம்களை ஓடுக்குகின்றார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?
we have to find out whether this name was properly approved by the MC before declaring it.
ReplyDeleteதமிழ் சகோதரர்களே நீங்கள் சாய்ந்தமருது வந்து எந்த ஒரு வீதியையும் குமாரசாமி வீதி என்று இரவோடு இரவாக பெயர் வைத்து விட்டு மறைந்து கொள்ளுங்கள் நாங்கள் அதை காவல் நிலையம் சென்று நீதிமன்றத்தின் உத்தரவுடனே ஐந்து வருடங்களுக்கு பிறகாவுது உடைப்போம் எங்கள் சிறுபான்மையின் பெருவுள்ளத்தை காட்டுவோம்.
ReplyDeleteWill the Mayor take any action against these uneducated barbarians?
ReplyDeleteதிரு. சம்பந்தன், மாவை செனதிராச, சுமந்திரன் அவர்களே, இது தானா முஸ்லிம் மக்களினுடனான உங்களது கட்சியினது கொள்கை ??? தமிழ் முஸ்லிம் மக்களது உறவை இப்படித்தான் முன்னெடுக்கப் போகிறீர்களா.???? இந்த வன்முறை கலாசாரம் உடனடியாக நிறத்தப்பட வேண்டும்.
ReplyDeleteநிசாம் கரைப்பர் அவர்களே, இந்த வன்முறை சம்பவத்துக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சம்பந்தப் பட்டவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்க பட வேண்டும்.
May be he had dreams that night the LTTE still in north..!!!!.... Shame on you..!!!
ReplyDeleteYOU MUST REMOVE THIS WHITE SHIRT BEFORE YOU DO THIS...at least you could respect for the white color.....Damn
Muslimkalikku mattum kalmunai sontham endru ninappavarkalukku ithu nallathoru padam.
ReplyDelete