மைத்திரி - கோதபாய இணக்கப்பாட்டில் விரிசல்..?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கும் இடையில் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டில் விரிசல் நிலைமை தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவான தரப்புக்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
இணக்கப்பாட்டின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஸ தரப்பு செயற்படாமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள், நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் பிரச்சார மேடைகளில் ஜனாதிபதி மைத்திரிபாலவை விமர்சனம் செய்வதில்லை என ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருந்த இணக்கப்பாடும் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இரண்டு தரப்பிற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடு முற்று முழுதாக வீழ்ச்சியடைந்து உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment