இலங்கையில் தோன்றிய மிகச்சிறந்த சர்வதேச தர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார - மஹேல
இலங்கையில் தோன்றிய மிகச் சிறந்த சர்வதேச தர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவே என இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
குமார் சங்ககார 12 ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களையும் 14 ஆயிரம் ஒருநாள் ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இந்திய அணியுடன் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகளுடன் சங்ககார சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
Post a Comment