ஜனாதிபதி மைத்திரி, நான் வகித்த அனைத்தையும் பறித்துக்கொண்டார் - சந்திரசேன
என்னை விட கூடுதலாக எவரேனும் விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டால் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன அறிவித்துள்ளார்.
அனுராதபுர மாவட்டத்தில் என்னைவிட எரேனும் கூடுதல் விருப்பு வாக்குகளை பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் நான் வகித்த அனைத்து பதவிகளையும் பறித்துக்கொண்டனர்.
முதலில் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கினார்கள். அனுராதபுர மாவட்டத் தலைவர், கலாவ தொகுதி அமைப்பாளர் ஆகிய பதவிகளிலிருந்து நீக்கப்பட்டேன். இந்தப் பதவிகள் பொருத்தமற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பதவிகள் பறிக்கப்பட்டாலும் மாவட்ட மக்கள் என்னுடனேயே இருக்கின்றார்கள். அனுராதபுர மாவட்டத்தில் என்னை விடவும் எவரேனும் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டால், நான் அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றுக் கொள்வேன் என சந்திரசேன கலாவ பிரதேசத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.
Post a Comment