Header Ads



முஸ்லிம் பிரதேசங்களில் ஞானசாரர், பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு, பூஜித ஜயசுந்தர விரைவு

பொதுபலசேனா அமைப்பின் பிரசாரக் கூட்டங்கள் காரணமாக அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கலந்து கொள்ளும் இரண்டு பிரசாரக் கூட்டங்கள் அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் இன்று நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு குறித்த பிரதேசங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக காவற்துறையினர் கூறியுள்ளனர்.

காவற்துறையினருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையின் கமாண்டோ படைப் பிரிவினர், கலகத்தடுப்பு காவற்துறையினர், தண்ணீர் தாரை தாக்குதல் வாகனங்கள் என்பனவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சிரேஷ்ட பிரதிக்காவற்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர உட்பட உயர் அதிகாரிகளும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

4 comments:

  1. யா அல்லாஹ் இவனையும் இவன் சார்ந்த கூட்டத்தையும் அடியோடு அழிப்பாயாக……!

    ReplyDelete
  2. இவன் நடத்தும் கூட்டங்கேளில் பிரச்சினை வரும் என்று அரசாங்கத்துக்கு நன்கு தெரிந்து இருந்தும் ஏன் கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது.பிரச்சினை வரும் என்றால் கூட்டத்த்தை தடை செய்ய வேண்டும் ஏன் இவனுக்கு பயப்பட வேண்டும நன்றாகவே தெரிகிறது இவன் ஒரு குழப்ப வாதி என்று .இவன் ஒரு பயங்கரவாதி பயங்கர வாத சட்டத்தின் கீழ் இவனை கைது செய்து உள்ள தள்ளனும்.உலகத்தில் உள்ள பயங்கரவாதிகளின் பெயர் பட்டியலில் இவனட கூட்டத்தை சேர்க்க வேண்டும் .உலகத்தில் பயங்கரவாதம் உருவாவது பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்துதான் இவன் எதில் பாதிக்கப்பட்டான்.முஸ்லிம்களுக்கெதிரான இன வெறி வெளிநாட்டில் உள்ள முஸ்லிம் எதிப்புவாதிகளினால் உருவாக்கப்பட்ட ஒரு இனவாத தீவரவாத இயக்கம்தான் இந்த BBS இயக்கம்.இவர்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete
  3. Ameen ameen amen allah mast panist him very soon insah allah

    ReplyDelete
  4. He is a best friend of the current government too.

    ReplyDelete

Powered by Blogger.