முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை, சிதைவடையச் செய்ய முயற்சி -ஹிஸ்புல்லாஹ்
பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை சிதைவடையச் செய்ய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் உள்ளிட்ட தரப்புக்கள் முயற்சித்து வருவதாக முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியின் ஊடாக நல்லாட்சி நிறுவப்பட்டது.
இதனை உறுதி செய்ய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு ஹக்கீம் முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் அமீர் அலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் ரிசாட் போன்றவர்களை தோற்கடிக்க வேண்டுமென தேர்தல் மேடைகளில் ஹக்கீம் பிரச்சாரமை; செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக நாம் 20ம் திருத்தச்சட்டத்தை எதிர்ர்த்து வருகின்றோம் என்றும், இவ்வாறான ஓர் நிலையில் முஸ்லிம் தலைவர் ஒருவர் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அழிக்க முயற்சிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
You are talking about President Maithri...??? Oh my God...!
ReplyDeleteThen what about your words about Mahinda & Co during presidential election..? Can you remember it....??
ஹிஸ்........ஹ் + ஹக்.........ம்
ReplyDeleteமக்களின் ஓட்டுப் பிச்சையெடுத்து
அவர்களின் முதுகிலேரி சவாரி செய்தாலும்
அவன் பக்்ஷவின் காலை நக்கி
மக்களின் கலீபா என்று கும்பிடுவீர்கள்
உங்கள் குடும்ப சுகபோகத்திற்காக
ஏதாவது முள்ளு கிடைக்குமாக இருந்தால்
முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்க
சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் சமர்ப்பித்தாலும் அதற்கும் இருகரமுயர்த்தி
முடிந்தவரை காலையும் உயர்த்தி ஆமோதிப்பீர்கள்
இதுதானா நீங்கள் முஸ்லிம் சமூகத்திற்காக
சிதறவிடாமல் பாதுகாத்த பிரதிநிதித்துவம்?
அஸ்ஸலாமு அலைக்கும் .நீங்கள் தோல்வி அடைவது உறுதியாகி விட்டது.முஸ்லிம்கள் மஹிந்தைக்கு வாக்கு சேர்க்கும் உங்களுக்கு வாக்கு தர மாட்டார்கள்.ஆகவே நீங்கள் எதிர் காலத்தில் ஒரு நல்ல பெயர் வாங்க ஒரேஒரு வழி இருக்கிறது.இப்போது உங்களுக்கு பின்னால் திரியும் சில வாக்காளர்களை அழைத்து நீங்கள் சொல்லுங்கள் இம்முறை நம்மால் வெற்றி பெற முடியாது ஆகவே வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருக்கக்கூடிய அப்துல்ரகுமானுக்கு நம் வாக்குகை கொடுத்து அல்லாஹ்வுக்காக முஸ்லிம்களின் பிரதிநிதிகளை அதிகரிப்போம் என்று சொல்லி ஒரு முடிவுக்கு வாருங்கள்.எதிகாலத்தில் உங்கள் பெயர் பொன் எழுத்தால் பொறிக்கப்படும்.இதுதான் இப்போதைய நிலையில் நீங்கள் செய்ய வேண்டிய ஒரேஒரு வேலை.அல்லாஹ்வும் நன்மையை தருவான்.
ReplyDeleteஉங்கள் சேவைகள் எக்பெயார் ஆகிவிட்டதை நீங்களே அறிவீர்களே. உங்களோடு சுற்றுபவர்களே உங்களுக்கு வாக்களிக்கப்போவதில்லை.
ReplyDeleteநீங்கள் இதுவரை சொல்லக்கொடிய முஸ்லிம்களுக்கு என்ன செய்துள்ளீர்கள் அவர்களுக்கு அணியாம் தான் செய்துள்ளீர்கள்.அதனால் பேசாமல் அரசியல் இருந்து ஒதுங்கி கொள்ளுவது நல்லது.
ReplyDelete