Header Ads



''முஸ்லிம் வேட்பாளர்களுக்கு, வாக்கு போடாதீர்கள்''

கொழும்பைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதி, கொழும்பில் போட்டியிடும் ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்குப் போடாதீர்கள் என பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தகவல் கிடைத்தது.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பிரபல்யமிக்க ஒருவர் இந்த தகவலை (வேதனையை) ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் பகிர்ந்துகொண்டார்

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, ரோசி சேனநாயக்கா, கலாநிதி ஹர்ஸா டி.சில்வா ஆகியோருக்கு வாக்களித்தால் போதும். கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்குப் போட வேண்டிய அவசியமில்லை எனவும்  பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் அறியமுடிகிறது.

அத்துடன் கொழும்பில் போட்டியிடும் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் தன்னை தேடிவந்து ஆதரவு கேட்கவில்லை. எனவே தான் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளருக்கும் வாக்கு போடச்சொல்லும் பிரச்சாரங்களில் ஈடுபடவில்லையென அந்த முஸ்லிம் அரசியல்வாதி தம்பக்க நியாயத்தை குறிப்பிட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. சரி ஐயா உம்மை ஒரு பொருட்டாக நம் தலைமைகள் மதிக்கவில்லை என்பதால் நீர் அவர்களுக்கு வாக்களிக்காமல் இருப்பது ஞாயம். அதற்காக ஏனையோரையும் அப்படி தூண்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று கௌரவத்திற்காக சமூகத்தை குழப்ப நினைக்காதீர்

    ReplyDelete

Powered by Blogger.