Header Ads



புலிகளுக்கு 8000 இலட்சம் பணம் கொடுத்த மஹிந்த - சம்பிக்க, மறுக்கிறார் மஹிந்த

மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையில் 2006ம் ஆண்டு ராடா நிறுவனத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 8000 இலட்சம் ரூபா பணம் கொடுத்ததாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் பகிரங்க உரையாடல் மேற்கொள்ள வருமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார். 

தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்தமைக்கான அனைத்து தகவல்களும் வௌிவந்துள்ளதாகவும் விரைவில் இது குறித்து வழக்குத் தொடரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சம்பிக ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார். 

போலி நிறுவனங்கள் மூன்றை உள்ளடக்கிய ராடா நிறுவனத்தின் பிரதானிகளான டிரான் அலஸ் மற்றும் எமில் காந்தன் ஆகியோரை பயன்படுத்தி மேற்கொண்ட பரிவர்த்தனைகள் தற்போது வௌிவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2
2005 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு, தாம்  பணம் வழங்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்ச இந்த மறுப்பினை  வெளியிட்டார்.

தாம் பணம் கொடுத்திருந்தால் எவ்வாறு மூன்று வருடங்களில் விடுதலைப்புலிகளை அழித்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரபாகரன் உயிருடன் இருந்தால் அவரிடம் இது தொடர்பான உண்மையை கேட்டறிய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




1 comment:

  1. Mahinda - Why do not you accept Ranawaka's invitation to debate.

    ReplyDelete

Powered by Blogger.