தேர்தல் கூட்டத்துக்கு சென்ற 5 பேர், மலசலக்குழிக்குள் விழுந்து காயம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு சென்றவர்களில் ஐந்து பேர், மலசலக்குழிக்குள் விழுந்து காயமடைந்த சம்பவம் கொட்டகலையில் இடம்பெற்றுள்ளது.
இ.தொ.கா.வின் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று, கொட்டகலையில் அமைந்துள்ள இ.தொ.கா.வின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்பு உணவு உண்பதற்காக சென்ற சிலர், அங்கு மூடிய நிலையில் காணப்பட்ட மலசலக்குழியின் மீது பயணித்துள்ளனர். இதன்போது குழி உடைந்ததால், அதன்மீது பயணித்த ஐவரும் குழிக்குள் விழுந்துள்ளனர். அருகிலிருந்தவர்கள் இவர்களை உடனடியாக மீட்டு டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சையின் பின்பு மேற்படி ஐவரும் வீடுதிரும்பியுள்ளனர்.
Post a Comment