Header Ads



ஜனாதிபதி மைத்திரி பச்சைநிற உடையணிந்து UNP டன் இணையவேண்டும், இல்லாவிட்டால் வீட்டை சுற்றவளைப்போம்

பொது தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பச்சை நிற உடை அணிந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வேண்டும், அவ்வாறு இணையாவிட்டால் இராணுவத்தினர் மற்றும் பொது மக்களை இணைத்துக்கொண்டு ஜனாதிபதியின் வீட்டை சுற்றவளைப்போம் என தாய் நாட்டிற்கான இராணுவ அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவ் அமைப்பின் ஏற்பாட்டாளர் தென் மாகாண சபை உறுப்பினர் மேஜர், அஜித் பிரசன்ன கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணியினால் வெற்றி பெற முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளமையினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட கூட்டணியில் தொடர்ந்து செயற்படுவதற்கு அவருக்கு உரிமை கிடையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெட்கம் என்ற நரம்பு வெட்டப்படவில்லை என்றால் தயவு செய்து ஐக்கிய தேசிய கட்சிக்கு செல்லவும்.

ஜனாதிபதியினால் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் இருப்பதற்கான உரிமை கிடையாது.

அவ்வாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு செல்லவில்லை என்றால் பொதுத்தேர்தல் நிறைவடைவதற்கு முன்னர் நாங்கள் ஜனாதிபதியின் வீட்டை சுற்றி வளைப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. மஹிண்டயின் சில்மிசம் ஆரம்பம்

    ReplyDelete
  2. பரவாயில்லை.. சுற்றி வளையுங்கள்.

    ஜனாதிபதி இல்லத்தில் முதல்நாளிரவு மீந்த பழையதுகள் இருந்தால் போடுவார்கள். வாங்கிச் சாப்பிட்டுவிட்டு செல்லலாம்

    ReplyDelete
  3. மஹிந்தயின் சில்மிசம் ஆரம்பம்

    ReplyDelete
  4. What a wonderful country! The military is telling the President what to do!

    ReplyDelete

Powered by Blogger.