குருநாகலில் முஸ்லிம்களை UNP ஏமாற்றியதால், JVP யை ஆதரிக்க தீர்மானம்..?
-இக்பால் அலி-
குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடயிருந்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா வேட்பாளர் பெயர் பட்டியிலிருந்து நீக்கியதை அடுத்து குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் ஆதரவாளர் மக்கள் விடுதலை முன்னணியை ஆதரிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவிலுள்ள முக்கியஸ்தர்கள் ஈடுபட்டு வருவதாக நம்பத் தகுந்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுப்பத்திரத்தில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா 18 வதாக கையொப்பமிட்டதாகவும் அது டிபெக்ஷின் மூலம் அழிக்கட்டு சஹாப்தீன் முஹமட் சாபி என்பவருடைய பெயர் போடப்பட்டுள்தை அடுத்து இந்தப் பிரச்சினை எழுத்துள்ளது குருநாகல் மாவட்டத்திலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் மத்திய செயற்குழு 22 உறுப்பினர்கள் தற்போது இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் களமிறங்கியுள்ள வேட்பாளர் சாபி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்பட்டுள்ளவர் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தளவு ஒரு பிரதே சபை உறுப்பினர் கூட இங்கு இல்லை எனவும் முஸ்லிம்களுடைய ஒற்றுமையை சிர்குலைத்து குருநாகல் மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாமற் செய்வதற்கு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சூழ்ச்சியாகும் என அவர்கள் தெரிவிக்கினறனர்.
அத்துடன் குருநாகல் மாவட்டத்தில் பெரும்பான்மையான முஸ்லிம் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும் அடுத்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களே இங்கு உள்ளனர். இவ்வாறான நிலையில் ஒரு அரசியல் முகவரியற்ற பலமற்ற ஒரு புதுமுகத்தை இந்த மாவட்டத்தில் களமிறக்கி ஐக்கிய தேசியக் கட்சி பெரும் துரோகத்தை இழைத்து விட்டது.
ஒரு புதிய புதுமுகத்தை களமிறக்குவதன் மூலம் அதிருப்தியுற்ற வாக்காளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் பெரும்பான்மையின மக்களுடைய வேட்பாளர்களுக்கு முஸ்லிம்களுடைய வாக்குகளைப் பெற்றுக் கொடுக்குகின்ற நோக்கிலேயே இந்தச் சதித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்குத் தகுந்த பாடம் புகட்டுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதவாளர்கள் இம்முறை மக்கள் விடுதலை முன்னணி ஆதவாளருக்கு வாக்களிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருதாகவும் கம்பஹா மாவட்டத்திலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் முக்கியஸ்தருடன் பேக்சு வார்த்தை நடத்தத் தீர்மானித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Don't be pitty
ReplyDeleteyes
ReplyDeletewe never with mr safi
Good Decition. Keep It Up
ReplyDeleteன் நாகப்பாம்பு சின்னத்துக்கு கீழ் உங்களுக்கு போட்டியிடலாமே. அதற்கு உங்களின் தலைவர் கூட முழு உத்தரவாதம் நிச்சயம் தருவார்
ReplyDelete