Header Ads



"மஹிந்த பிரதமராவதில், சட்டச் சிக்கல்" jaffna muslim இணையத்தின் சிறப்பு ஆய்வு

-நஜீப் பின் கபூர்-

பாராளுமன்றம்தான் தனது பெரும்பான்மைப் பலத்தில் பிரதமரைத் தீர்மானிக்கும். எனவே எங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக்குவதில் எந்த நெருக்கடிகளும் இருக்க மாட்டாது, என்று தற்போது மஹிந்த தரப்பினர் மேடைகளில் முழங்கி வருகின்றனர்.

நாங்கள்தான் வெற்றிபெறுவோம் எனவே பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்கள் எங்களுக்கே கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

பிரதமரைத் தெரிவு செய்வது ஜனாதிபதிதான் இதனைத்தான் நமது அரசியல் யாப்பு சொல்கின்றது. எனவே பிரதமர் தெரிவு எப்படி நடக்கின்றது என்பதனை இவர்கள் யாப்பைப் படித்துப் பார்க்க வேண்டும். இப்படி ஒருபோடு போடுகின்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

மஹிந்த பிரதமராக முடியும் முடியாது என்று விவதங்களுக்கு மத்தியில் நாம் எமது இணையதளத்தின் ஊடாக இப்படி ஒரு சட்டப் பிரச்சனையை நாம் கிளப்புகின்றோம்.

19 வது அரசியல் யாப்பின் படி  ஒருவர் இரு முறைக்கு மேல்  ஜனாதிபதியாக இருக்க - வர முடியாது என்ற திருத்தம் 19 மூலம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

எனவே மஹிந்த பிரதமராக வருகின்றார் என்று எடுத்துக் கொண்டால் தற்போதய ஜனாதிபதி வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபடுகின்றார் அல்லது  ஜனாதிபதியாக இருப்பவர் அசாதரண நிலையில் அந்தப் பதவியில் இருக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. அல்லது அவருக்கு இறப்பு  என்றுகூட  வந்தால் பிரதமரே ஜனாதிபதியாக யாப்பின்படி பதவி ஏற்க வேண்டும்.

எனவே ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என்று சட்டம் சொல்லும் போது அதிகப் பெரும்பான்மையுடன் மஹிந்த வெற்றி பெற்றாலும் பிரதமராகவோ சபாநாயகராகவே பதவி ஏற்பதில் சட்டச்சிக்கல் இருக்கின்றது என்று நாம் முன்கூட்டியே சொல்லிவைக்கின்றோம்.

இந்த விவகாராம்  இனி நாட்களில் மேடைகளில் பேசுவார்கள் என்று நாம் எதிர்வு கூறுகின்றோம்.

No comments

Powered by Blogger.