Header Ads



ISIS தீவிரவாதிகளினால், இலங்கையில் ஆபத்து கிடையாது

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் இலங்கையி ல் ஆபத்து கிடையாது என காவல்துறையினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.இலங்கையில் குறித்த தீவிரவாத இயக்கம் இயங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது உயிருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் இன்றைய தினம் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.அண்மையில் சிரியாவில் கொல்லப்பட்ட இலங்கையரான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி தம்மை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித் தீவிரவாத இயக்கம் இலங்கையில் செயற்பட்டு வருவதற்கான எவ்வித ஆதரங்களும் கிடையாது எனவும், அவ்வாறான அச்சுறுத்தல்கள் கிடையாது எனவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

3 comments:

  1. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். நல்லா பயந்துட்டான் போல

    ReplyDelete
  2. அப்படியல்ல உமர் ஹம்சா இது சிங்கள மக்களின் வாக்குகளை பிடுங்கி எடுக்க இவர்கள் போடும் திட்டம் . எப்படியாவது மக்களை திசை திருப்பி சிங்காசனம் ஏறுவதுதான் இவர்களின் ஆசை.

    ReplyDelete
  3. இல்லாத ஒன்றை இருக்கிறது என்று சொல்லும் இவர்களை ஏன் உளவுத்துறை விசாரணை செய்யாமல் இருக்கிறது.நன்கு விசாரணை செய்து அப்படி இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்அப்படி இல்லை என்றால் பொய்ப்பிரச்சாரம் செய்த குற்றத்துக்கு அதன் சட்டத்தின் கீழ் எவனை பிடித்து உள்ளே தள்ள வேண்டியதுதானே.

    ReplyDelete

Powered by Blogger.