Header Ads



இலங்கையைச் சேர்ந்த ISIS பயங்கரவாதி மரணம் - நாட்டு முஸ்லிம்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை

இலங்கையின் ISIS  / பயங்கரவாதி மரணம் தொடர்பான செய்தி அரசால் புரசலாக கசிந்துள்ள நிலையில், குறித்த நபரின் ஊருக்கு இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ள செய்தி உறுதி செய்யப்பட்டு மிகுந்த அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

இது இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் ஒரு அபாய எச்சரிக்கை ஆகும். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒரு இளைஞன் சிரியா வரை சென்று தன்னையே தியாகம் செய்கின்றான் என்னும் பொழுது, இது இயல்பாக நடக்கமுடியாத ஒன்றாகும்.

இப்படி செய்தது ஒன்றும் தெரியாத இரத்தம் கொத்திக்கும் டீனேஜ் இளைஞன் அல்ல. 7 குழந்தைகளின் தந்தை இப்படி செய்தால், இதற்கு பயங்கரமான பின்னணி இருக்க வேண்டும். இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்கள் என்று சொல்லி பிரச்சாரம் செய்யும் எதோ ஒரு இயக்கம் இதன் பின்னணியில் இருக்க வேண்டும். இப்படியான நயவஞ்சகத் தனமாக அடுத்தவர்களின் பிள்ளைகளை உசுப்பேற்றி பலி கொடுக்கும் இயக்கங்களின் செயல், நாளை இந்த நாட்டில் முஸ்லிம்கள் வாழவே முடியாத சூழலை உருவாக்கலாம்.

இவர் ஒரு கல்வியறிவற்ற முட்டாள்தனமான நபர் அல்ல, இவரின் தந்தை, பாட்டன் ஆகியோரும் சட்டத்தரணிகள், இவரும் ஒரு சட்டத்தரணி, அது மட்டுமல்ல கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்தும் இருக்கின்றார். இவர் மடத்தனத்தால் ISIS ஐயும், மரணத்தையும் தெரிவு செய்திருக்க முடியாது. இலங்கையில் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்கின்றோம் என்று செயல்படும் இயக்கம் ஏதாவது இதன் பின்னியில் இருக்கவே வேண்டும். இதனை ஊகிப்பது பெரிய கஷ்டமான விடயம் அல்ல. நாம் இப்பொழுதே விழித்துக் கொள்ளாவிடின் நாமும் அழிந்து போகலாம், பல முஸ்லிம் கிராமங்கள் இலங்கை வரைபடத்தில் இருந்தே இல்லாமல் ஆக்கப்படலாம்.

இஸ்லாமிய ஆட்சி, கிலாபா, ஜிஹாத், சஹீத், அல்லாஹ்வின் பாதையில் மரணம் என்றெல்லாம் உணர்வூட்டி, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பயங்கரவாத சிந்தனைகளும், இந்த நாட்டிற்கு பொருத்தமற்ற கொள்கைகளும் விதைக்கபடாவிட்டால், இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்காது.

இது ஒரு மரணம் தான் நமக்கு தகவல் கிடைத்துள்ளது, இன்னும் எத்தனை பேர் பயங்கரவாதிகளாக உள்ளனர் என்று முழுமையாக தெரியவில்லை. இப்பொழுதே விழித்துக் கொள்ளவிட்டால் முஸ்லிம் என்றாலே நாட்டிற்கு அச்சுறுத்தல் என்கின்ற நிலையில் பார்க்கப்படலாம்.

மொத்த இலங்கை முஸ்லிம்களின் அமைதியான வாழ்க்கை, இந்த நாட்டின் பொது அமைதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்கு பொருத்தமற்ற கொள்கைகளை போதிக்கும், இப்படியான பயங்கரவாதிகள் உருவாக மறைமுகமாக துணைபோகும் இயக்கங்களை தடை செய்ய முஸ்லிம்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தீவிரவாதக் கருத்துகளை மறைமுகமாகவோ, பகிரங்கமாகவோ பிரச்சாரம் செய்யும் மவ்லவிகள், இயக்கங்கள் குறித்து முஸ்லிம்கள் உரிய தகவல்களை அரசுக்கு வழங்காவிடில், எதிர் காலத்தில் இந்த நாட்டில் முஸ்லிம்கள் வாழ முடியாத சூழ்நிலை உருவாகும்.

வயிற்ருக்குள் தேவையில்லாத ஒரு கட்டி வளர்ந்தால், டாக்டரிடம் சென்று ஒபரேசன் மூலம் வயிற்ரை வெட்டி கட்டியை அகற்றினால்தான் நோயாளி பிழைக்க முடியும். கட்டி நமது உடலுக்கு உள்ளே இருக்கின்றது, ஆகவே உடலுக்கு சொந்தமானது, கட்டி உடலுடன் சேர்ந்து வளர்கின்றது என்று கட்டிக்கு இறக்கம் காட்டினால், அது வளர்ந்து வெடித்து அந்த நபரையே மரணிக்க வைத்துவிடும். இதுபோலவே இலங்கைக்கு தேவையில்லாத இஸ்லாமிய இயக்கங்கள், மவ்லவிமார், கொள்கைகளை அகற்ற வேண்டும், அதனை பாதுகாப்புப் பிரிவு என்கின்ற டாக்டரிடம் சென்று ஒபரேசன் செய்துகொள்ளத்தான் வேண்டும் என்றால், அதனை செய்யத்தான் வேண்டும்.

இஸ்லாம் சாந்தியினதும், அமைதியினதும் மார்க்கம். முஸ்லிம்கள் மத்தியில், சிறுவர்கள், மாணவர்கள் மத்தியில் தீவிரவாத, பயங்கரவாத, அடிப்படைவாத கருத்துக்களை விதைக்கும் அனைவரையும் புறக்கணிப்போம், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம், இல்லை என்றால், ஒரு நாளில் நாம் இருந்த இடம் தெரியாமல் போகலாம். புலிகள் இயக்கத்தால் தமிழர்கள் பட்ட துன்பங்களை நாம் பாடமாக கற்றுக் கொள்வோம்.

- அபூ அம்மார்

22 comments:

  1. எத்தன உண்மைத்தன்மையை மிக ஆழமாக விசாரிக்க வேண்டும். இதன் பின்னணியில் பாரிய பொருளாதார பின்னணி ஓன்று இருக்க முடியும்.அல்லது இவர் எவ்வலு படித்தவராக இருந்தாலும்,முட்டாளாக்குவது பாரும் விடயம் இல்லை.இதுக்கு உதாரணம் சில அரசியல்வாதிகள் எவ்வலவு அனுபவம் இருந்தும் சில சந்தர்ப்பத்தில் முட்டாளாகி விடுகிறார்கள்.ஆகவே புலனைவுத்துரையோடு சேர்ந்து நாமும் கூடிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இதன் பின்னணி என்ன என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.இது ஒரு திட்டமிடப்பட்ட சதியாகத்தான் இருக்க முடியும்.

    ReplyDelete
  2. சிந்திக்க வேண்டிய விடயமாக உள்ளது நாடு விட்டு நாடு பணப்பலம் சென்று பல சூழ்ச்சிகள் செய்யப்படுகின்றது.இலங்கையில் தேர்தல் காலம் எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.முஸ்லிம்கள் தீவரவாதிகள் ,அடிப்படைவாதிகள் என்று முத்திரை குத்துவதற்கு துடியாய் துடிக்கும் முன்னாள் ஆட்சியாளர்கள் அவேர்களுடைய அடிவருடிகள் உள்ளனர்.தற்போதைய அரசியல் நிலையில் இந்தியாவின் ஊடுருவல் அதிகமாக உள்ளது.முஸ்லிம்களுக்கு எதிரான மேற்க்கேத்திய நாடுகளின் உதவி முன்னாள் ஆட்ச்சியாலர்களுக்கு உண்டு. நாட்டில் பிரச்சாரத்தை இலகுவாக எடுத்துச்சொல்ல இனவாதிகளுக்கு வசதியான வேலையாகவும் இருக்க முடியும்.இனவாதத்தை காட்டி அரசியல் செய்யும்கடந்த காலங்களையும் சிந்திக்க வேண்டும். ஆகவே சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள நம்மவர்களை தொடர்புகொண்டு ஆழமாக விசாரிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. Illatha pollatha katpanai udan eluthap patta article. Yaaro oruwan paliyaanathatku islamiya iyakkangalaik kutram solla wendam. Neengale ippadi kaattik kodukkalama? Think before write anything.

    ReplyDelete
  4. சகோதரர்களே,

    நமது மதத்தை அமைதி மார்க்கம், சாந்தி மார்க்கம் என்று நாம் மட்டும்தான் கத்திக்கொண்டிருக்கின்றோம். ஆனால் வெளியுலகில் நம்மைப்பற்றிய பிம்பம் எவ்வாறுள்ளது தெரியுமா?

    'நமது மதம் ஒரு தீவிர அரசியல் நோக்கம் கொண்ட மதம். அது அடிப்படையில் பிறமதத்தவர் மீது வெறுப்பை ஏற்படுத்தி ஜிஹாத் என்று அழைக்கப்படும் அவர்கள் மீது தொடுக்கும் போரையே கொள்கையாக வைத்துக்கொண்டுள்ளது. ஆயினும் தன்னை சமாதானத்தின் மதம் என்று சொல்லிக்கொள்ளுகின்றது' என்றுதான் உலகெங்கும் கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    இந்தக் கருத்துருவாக்கம் மத விரோதமான சக்திகளால் மட்டுமல்ல நமக்கு ஆதரவான சக்திகளாலும்தான் (அவர்களையறியாமல்) ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் இதிலுள்ள சோகம்.

    இதைக் கூறுவதற்காக பலர் ஆத்திரப்படலாம். ஆனால் யதார்த்தம் இவ்வாறுதான் உள்ளது.

    இதோ இன்று தீவிரவாதம் நமது வாசற்படிக்கே வந்து விட்டது.

    இனிமேலும் நாம் 'ஈச்சைமரத்து இன்பச்சோலையில்' பாடிக்கொண்டு பழைய கனவுகளில் வாழ்ந்துகொண்டிருந்தால் நாளை நிறைய விலை தரவேண்டியிருக்கும்;.

    ReplyDelete
  5. Please don't jump,without knowing the deep,subject person is studied at Pakistan.so we can understand that it's breeding ground of extremism.be calm and quite.truth will prevail.(don't try to judge the Islamic groups with wrong miscalculation,it can lead us to destruction -more over those countries are under Zionists occupation)

    ReplyDelete
  6. படித்தவர்,படித்த குடும்பத்தில் உள்ளவர் தொழில் நோக்கத்தில் வெளிநாடு சென்றிருக்கலாம் அதை இனவாதிகள் திரிவுபடுத்தியிருக்கலாம்.எவ்வாறாயினும் தீர விசாரித்தே முடுடிவுக்கு வரவேண்டும்.சும்மா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது

    ReplyDelete
  7. தஃவப் பணியில் ஈடுபடும் எந்த இயக்கமும் isis சில் சேறும்படி போதிக்கவுமில்லை

    ReplyDelete
  8. This is the consequence of the radical Wahhabi Islam spreading among the peaseful Muslim community in srilanka

    ReplyDelete
  9. yes u r correct mr. musthafa.the jaffna muslim should make sweare and publish otherwise it will be a big issue.better avoid to talk with friend,s over the phone

    ReplyDelete
  10. Time has come for Muslims in countries like Srilanka decide what they want !
    Democracy , Islam in democracy or nothing but Islam . Is Gnanasara right that we
    are being radicalised to a dangerous proportion ?

    ReplyDelete
  11. ISIS அமைப்பு தவறானது, புறக்கணிக்கப் பட வேண்டியது, இஸ்லாத்திற்கு பொருந்தாத பல கொள்கைகளைக் கொண்டது என்பதில் சந்தேகம் கிடையாது. நாம் ஒரு போதும் அவர்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. நான் அறிந்த வரை பெரும்பாலும் ISIS அமைப்பையோ அதன் கொள்கைகளையோ இலங்கையில் உள்ள உலமாக்களோ இயக்கங்களோ சரிகண்டதாகவோ அவ் அமைப்பின் பக்கம் ஆர்வமூட்டியதாகவோ செய்திகள் கிடையாது. அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா உற்பட பெரும்பாலும் அனைத்து உலமாக்களும் ISIS இன் தவறான செயற்பாடுகள் பற்றி மக்களுக்கு எச்சரித்து வருவதுடன் அவர்களைப் புறக்கனிக்குமாறே பயான்கள் பண்ணியும் வருகின்றார்கள்.

    குறித்த இலங்கை நபர் என்ன காரணத்தினால், எந்தப் பின்னணியில் ISIS இல் போய் சேர்ந்தார் என்பதை அலசி அறிய வேண்டும். சர்வதேச இணைய அமைபுக்களிநூடாக அல்லது தவறான இணையத் தளங்களிநூடக உந்தப் பட்டுக் கூட போய் சேர்ந்திருக்கலாம்.

    ஆனால் அபூ அம்மார் என்ற கட்டுரையாளர் இலங்கையின் உலமாக்களையும் இயக்கங்களையும் இழுத்து இங்கே குறை கூறி இருக்கின்றார். ஒரு சமூக இணையத் தளத்துக்கு கட்டுரை எழுதும் போது அதனை முஸ்லிம் அல்லாதோர் கூட ஏராளமாக பார்க்க முடியும். குறித்த கட்டுரையாளர் முஸ்லிம், தமிழ் மக்கள் அனைவருக்கும் உலமாக்களை தீவிரவாதிகளாக சிந்திக்க வைக்கத் தூண்டுகின்றாரா ??

    ReplyDelete
  12. Nigal iakam than mudvok varamal yaar enru thira visarika vaynum padithavan pattam islam arivo zero athai vilanganum

    ReplyDelete
  13. does not matter whatever this case is you should not publicize this Jaffna Muslim

    ReplyDelete
  14. no mainstream media published this news. so why you jaffna muslim ? can we keep quit till make sure ?

    ReplyDelete
  15. the article you have written is not in a good manner, please try to change your attitude.you are pointing out and blaming the the hole muslim community.

    ReplyDelete
  16. Nice one Jawfer. Thumbs up

    ReplyDelete
  17. මුහම්මද් නබි තුමානන්ව අනුගමන නොකරන කිසිවෙකු අරාබි නමින් හදුන්වුනු පලියට මුස්ලිම් වෙන්නෙ නැහැ. ලිපිකරු ගැන විවේචනය නවතා, ඔහු කියන කරුණු ගෙන විමසිලිමත් වන්න. ඉස්ලාම් ආගමික විද්වතුන්ට සහ ඉස්ලාමීය දඃවා සන්විදානවලට මෙය සොයා බැලීම විශාල කාර්‍ය භාර්‍යයකි.

    ReplyDelete

  18. இஸ்லாமிய ஆட்சி, கிலாபா, ஜிஹாத், சஹீத், அல்லாஹ்வின் பாதையில் மரணம் என்றெல்லாம் உணர்வூட்டி, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பயங்கரவாத சிந்தனைகளும், இந்த நாட்டிற்கு பொருத்தமற்ற கொள்கைகளும் விதைக்கபடாவிட்டால், இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்காது.

    சகோதரரே அடக்கி வாசியும் !!
    அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்
    மேலே நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும் பர்லுகளே !!!
    மக்காவில் சிறுபான்மையாக இருந்த நபிதான் மதீனாவில் ஆட்சி அமைத்தார்கள் மறந்து விடாதீர்கள் !!
    கிலாபா இலங்கையில் இருக்கும் முஸ்லிம்களுக்கும் கடமைதான் அதை மறவாதீர்கள் !

    ஐ ஸ் ஐ ஸ் யை காட்டி கொடுகபோரம் என்று உண்மையான கிலாபாவின் கடைமையை மறந்து விடாதீர்கள்

    ReplyDelete

  19. இப்படி நீங்கள் எழுதினான் நீங்கள் மிதவாதி (modarate ) , கிலாபாதான் ஓரே தீர்வு என்றால் அவர்கள் தீவிரவாதி . நல்லா இருக்குடா உங்களுடைய கதை

    ReplyDelete
  20. ivarin kadduraya parthal sri lanka muslimkal theeviravathikal enru ivarai solramathiri iriki

    ReplyDelete
  21. எவனோ ஒருவன் எவனோ ஒரு இயக்கத்துக்காக சிரியாவில் இறந்ததை பெரிது படுத்தி எல்லாரையும் குறை சொல்லும் ஆசிரியன் யார் ?
    எழுதியவன் ஆசாத்தின் நலன் விரும்பியா ? !
    நபி ஸல் முன்னறிவுப்பு செய்த கிலாபவின் எதிரியா ? . கலிமா சொன்ன முஸ்லிம்கள் இஸ்லாமிய அட்சி முறையான கிலாபவின் கீழ்தான் வாழ விரும்புவான் அனால் இவனோ இஸ்லாமிய ஆட்சி என்றால் தீவிரவாதம் என்கிறான் !! எழுதிய ஆசிரியன் ஷியாவா ?? சியாவின் கைகூலியா ?

    ReplyDelete
  22. இது ஒரு திரிபு படுத்தப்பட்ட ஒரு செய்தி ஏன் என்றால் இந்த செய்தி ஜப்ன முஸ்லிமில் மட்டும் பிரசுரிக்கப்பட்டுள்ளது இதைப்பற்றி வேறு எந்த ஒரு செய்தி பத்திரிகையிலும் நான் காணவில்லை ஆகவே இது ஒரு தவறாக அறியப்பட்ட ஒரு செய்தி. அரசாங்க புலணாய்வுத்துறை தெரிந்த விடயம் ஏன் இதைப்பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை ஒரு ஊடகம் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்தலாமே ஏன் அதை எந்த ஊடகமும் செய்யவில்லை. சமூகம் இதைப்பற்றி சற்று சிந்திக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.