Header Ads



Face book இல் மைத்திரி - மகிந்த மோதல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் நிலவி வரும் பிளவு பூதாகாரமாகியுள்ளதாக கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒரே கட்சியைச் சேர்ந்த தரப்பினர் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கி கொள்வதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ தரப்பாகவும், மைத்திரிபால சிறிசேன தரப்பாகவும் இரண்டு குழுக்களாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிதுள்ளார்.

குறிப்பாக முகநூலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மல்சா குமாரதுங்க, மஹிந்த சமரசிங்க,  ஜனக பண்டார தென்னக்கோன், துமிந்த திஸாநாயக்க, சாந்த பண்டார, திலங்க சுமதிபால, லக்ஸ்மன் யாபா அபேவர்தன, விஜித விஜயமுனி டி சொய்சா உள்ளிட்ட சில நபர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என முகநூலில் அதே கட்சியைச் சேர்ந்த மற்றுமொரு தரப்பினர் கோரி வருகின்ற நிலைமை காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுவாக விருப்பு வாக்கு முறைமையில் ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களக்கு இடையில் விருப்பு வாக்கு போட்டி காணப்பட்ட போதிலும், இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் இந்த நிலைமை கடுமையாக மோசமடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
 

No comments

Powered by Blogger.