சுவிஸில் சேகரிக்கப்பட்ட பித்ரா பணம், இலங்கையில் உலருணவு பொருட்களாக பகிர்ந்தளிப்பு (படங்கள்)
சுவிஸர்லாந்து வாழ் இலங்கை முஸ்லிம்களினால் சேகரிக்கப்பட்ட பித்ரா பணம் இன்று புதன்கிழமை 15 ஆம் திகதி குருநாகல் - மனாப்பிட்டி, பம்பன்ன பிரதேசத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசல் மற்றும் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் ஆகியன இணைந்து இந்த பணத்தை சேகரித்திருந்திருந்தன.
பால்பைக்கட், அரிசி, தேயிலை, டின்மீன், சோயா, சீனி உள்ளிட்ட உலருணவு பொருட்கள் அடங்கிய பார்சலாக இவை இன்று குறிப்பிட்ட பிரதேச மக்களுக்கு பகிர்ந்தளிககப்பட்டுள்ளன.
சுவிஸில் வாழும் இலங்கை முஸ்லிம்களின் சார்பில் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய மத்திய குழு உறுப்பினர் அல்ஹாஜ் பிர்தௌவ்ஸ், ஐரோப்பயி இஸ்லாமிய தகவல் நிலைய இளம் அங்கத்தவர்களான ஹஸீப் ஹனீப், அமான் அமீர் ஆகியோரினால் இந்த உலருணவுபொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே கீழே காண்கிறீர்கள்.
Post a Comment