Header Ads



"மைத்திரியை விரட்டும்" திட்டம் உருவாக்கப்பட்டுவிட்டது"

நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எப்படி பதவியில் இருந்து அகற்றுவது என்பது குறித்து பேராசிரியர் நளின் டி சில்வா இன்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

கொழும்பு நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவை முதலில் கட்சியின் தலைவர் பதவியிலும் உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவோம்.

தேர்தலின் பின்னர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு பலத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் சிறிசேனவை இலகுவாக ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவோம்.

ஏற்கனவே அதற்கு தேவையான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. முதலில் நீங்கள் தேர்தலில் வென்றாக வேண்டுமே..?

    ReplyDelete
  2. ஜாஸ்லிய தயவு செய்து உங்கள் போட்டோவை மாற்றி வேறோர் போட்டோவை இடுங்கள் .

    ReplyDelete

Powered by Blogger.