மைத்திரியின் நடவடிக்கையால் மஹிந்தவுக்கு உளவியல் பாதிப்பு - இந்திய யோகா நிபுணர் வருகிறார்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது கடும் உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் உளவியல் பாதிப்பை கட்டுப்படுத்த அவருடன் தற்போது மனநல மருத்துவர் உடன் இருப்பதாக அறியகிடைத்துள்ளது.
எவ்வாறாயினும் ராஜபக்ச குடும்பத்தினரின் தீர்மானத்திற்கு அமைய முன்னாள் ஜனாதிபதியின் உளவியல் பாதிப்பை கட்டுப்படுத்த உடனடியாக இந்தியாவை சேர்ந்த பிரபல யோகா தியான ஆலோசகர் வரவழைக்கப்பட உள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த நேரத்தில் கூட இவ்வாறு சில மனநல மருத்துவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு சிகிச்சையளித்துள்ளனர்.
அப்போதும் இந்த யோகா தியான பயிற்சி ஆலோசகரை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் இணைய சந்தர்ப்பம் கிடைத்ததும், அவரது உளநலம் சீரானது. இதனால், யோகா தியான பயிற்சியாளரை வரவழைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
இந்த விடயம் குறித்து முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவிடம் தகவல் அறிய முயற்சித்த போது, மகிந்த ராஜபக்ச எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடும் நிலைமையில் தற்போது இல்லை என அவரது ஊடகப் பிரிவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் நேற்றிரவு நடைபெற்ற கலந்துரையாடலின் போது முன்னாள் ஜனாதிபதி, அவர்களுடன் பதட்டமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஐயா,
ReplyDeleteசிகிச்சை முடிவடைந்ததும் உளவியல் நிபுணர்களை அவசரப்பட்டு இந்தியாவுக்கு திருப்பியனுப்பிவிட வேண்டாம். ஆகஸ்ட் 18 அதிகாலையில் மீண்டும் தேவைப்படுவார்கள்.
Time is up to go to hell.
ReplyDeleteஇவருக்கு மன நோய் உள்ளது என்று நான் பல தடவை Jaffna muslim பகுதியில் பின்னூட்டம் எழுதியுள்ளேன்.
ReplyDelete