Header Ads



மஹிந்த தொடர்பில் கைவிரித்தார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக எந்தவிதமான முடிவையும் எடுக்க எனக்கு அதிகாரம் கிடையாது எனத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அவரது பாதுகாப்பு அதிகாரிகள் வரையறையை மீறி நடந்து கொண்டால் அது தொடர்பாக பாதுகாப்புத் தரப்பே முடிவுகளை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவிக்கையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகளை மீளப் பெறுமாறு அமைச்சரொருவரும், வேட்பாளர் ஒருவரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

அவ்வாறு முறைப்பாடு செய்வதற்கு அவருக்கு உரிமையுள்ளது.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தேர்தலில் போட்டியிடுவதால் அவர் ஒரு வேட்பாளராகவே கருதப்பட வேண்டும்.  எனினும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக எந்தவிதமான முடிவையும் எடுக்க எனக்கு அதிகாரம் கிடையாது.

No comments

Powered by Blogger.