Header Ads



கருணாவின் புலம்பல்

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர்  விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா ) விசனம் தெரிவித்துள்ளார்.

தேசியப்பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பதாக சுசில் மற்றும் அனுர பிரியதர்சன யாப்பாவும் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் கடைசியில் எனது பெயர் தேசியப்பட்டியலில் வெளியிடப்படாதது வருந்தத்தக்கது.

போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது, கோத்தாபயவும், லக்ஸ்மன் ஹுலுகல்லவும், வந்து அரசாங்கத்துக்கு உதவ வேண்டும் என்று உனது உதவியைக் கோரினர்.

அந்த நேரத்தில் நாட்டுக்காக நான் மிகவும் ஆபத்தான ஒரு முடிவை எடுத்தேன். அதன் காரணமாக, தமிழர்களின் சில பகுதியினரின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது. என்று குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. 'அரசன் அன்று கொல்வான் நின்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்' என்று கிராமத்துப் பழமொழி ஒன்றுள்ளது.

    காத்தான்குடியிலும் ஏறாவூரிலும் பள்ளிவாசல்களில் தொழுதுகொண்டிருந்த அப்பாவி மக்களைக் கோழைத்தனமாக படுகொலை செய்வித்தவனுக்கு இது மட்டுமா இன்னும் வரும்.

    இருந்து அனுபவிக்கணும் அண்ணாச்சி!

    ReplyDelete
  2. தமிழ் மக்களால் காட்டிக்கொடுத்தவன் எனும் பதவிவழங்கப்பட்டிருதபோதும் மஹிந்த அரசால் கைகழுவி விடப்பட்டவன் எனும் பதவியே வழங்கப்பட்டது என்பதுதான் இந்த செய்திக்கு பொருத்தமா இருக்கும்

    ReplyDelete
  3. காட்டிகொடுத்தவனும் கூட்டிகொடுத்தவனும் நல்லா வந்த வரலாறே கிடையாது இப்பதான் உனக்கு சனியன் ஆரம்பித்து இருக்கு.இன்னும் நடுப்பகுதிக்கு கூட வரவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.