குளிக்கச் சென்ற ஐவர், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்
வலஸ்முல்லை - வராபிடிய கிரம ஆற்றில் மூழ்கி ஐவர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் ஆற்றில் குளிக்கச் சென்ற ஐவரே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
48 வயதான தந்தை, 47 வயதான தாய், 21 மற்றும் எட்டு வயதான இரு மகள்கள், மகளின் நண்பியான 21 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

انا للله وانا اليه راجعون எல்லாம் உயிர் எல்லோரும் மனிதர்கள் அந்த வகையில் நாம் அவேர்களுக்கு அனுதாபம் காட்ட வேண்டும் . தற்போது பெருநாள் சீசன் என்பதால் நம்மவர்களும் தெரியாத வெளி ஊர்களுக்கு போவது அந்த ஊரில் உள்ள அனாம் அறியாத கடல் ஆறு நதி போன்ற நீரருவிகளில் குளிப்பது பேராபத்தை உண்டுபன்னக்கூடியதாக இருக்கிறது ஆகவே மிகவும் கவனமாக இருக்க வேண்டி சமூக நலன் விரும்பிகள் ஆலோசனை வழங்க வேண்டும்.
ReplyDelete