Header Ads



"மகிந்த ராஜபக்சவை கொலை செய்யும் திட்டத்தை செயற்படுத்தவே, அவரது பாதுகாப்பை குறைக்க எதிர்பார்துள்ளனர்"

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைப்பதன் மூலம் அவரது உயிரை பலிகொடுக்கும் திட்டம் ஒன்று செயற்படுத்தப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு புலனாய்வு பிரிவின் அறிக்கையின் அடிப்படையிலேயே விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் தேவைக்கு அமைய அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இன்று எதிர் முறைப்பாடு ஒன்றை செய்வதற்காக சென்றிருந்த போதே முஸ்ஸாமில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் சிறப்புரிமை வசதிகளுடன் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதால், ஏனைய வேட்பாளர்களுக்கு அநீதி ஏற்படும் எனக் கூறி மக்கள் விடுதலை முன்னணி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தது.

இதற்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில் இந்த எதிர் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கருத்து வெளியிட்ட முஸ்ஸாமில்,

மகிந்த ராஜபக்சவை கொலை செய்யும் திட்டத்தை செயற்படுத்தவே அவரது பாதுகாப்பை குறைக்க எதிர்பார்துள்ளனர். அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத காரணத்தினால் இந்த சதித்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு நிகரான சிறப்புரிமைகளுடன் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு உயிராபத்து இருக்கலாம் என கருதுவதால், அதனை எதிர்க்கவில்லை.

சுவரொட்டிகளில் மக்கள் விடுதலை முன்னணி மனச்சாட்சியை பற்றி குறிப்பிட்டிருந்தாலும் அந்த கட்சி உண்மையான மனச்சாட்சி இல்லை என்பது இவ்வாறான செயல்கள் மூலம் தெளிவாகியுள்ளது.

அத்துடன் இப்படியான கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியிடம் கேட்டுக்கொள்வதாகவும் மொஹமட் முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. 'மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுபவர்' என்பது உங்களைப் பார்த்தாலே எவருக்கும் புரிந்து விடும்.

    டேக் இற் ஈஸி மிஸ்டர் முஸம்மில்!

    ReplyDelete
  2. இந்த மொட்டைக்கு முதலில் ஒரு பாலை கட்ட வேண்டும் , மஹிந்த ஐயாவுக்கு முந்திரி கொட்டையே இவர்தான்.

    ReplyDelete
  3. முசம்மில் தேர அவர்களே ஞானசார தேரர் ஒருபக்கம் இந்த தேரர் ஒருபக்கம் முஸ்லிம்களுக்கு தொல்லையாக உள்ளது நீங்கள் முதலில் முழுமையாக இஸ்லாத்தில் இருங்கள் அல்லாது முழுமையாக புத்தனாக இருங்கள் இரண்டும்கெட்டான் இலையில் வாழ்த்தால் எந்த மதம் என்று தெரியாமல் போய்விடும்.எது எவ்வாறு இருந்தாலும் நீ ஒரு பச்ச முனாபிக் என்பது மட்டும் உண்மை.

    ReplyDelete

Powered by Blogger.