Header Ads



தேர்தல் பிரச்சாரத்தில் இனவாதத்தை, மதவாதத்தை தூண்டினால் கைது செய்யப்படுவர்

-எம். எஸ். பாஹிம்-

தேர்தல் காலத்தில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யும் வேட்பாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இனவாதத்தை தூண்டும் வகையில் பேசி மீண்டும் அளுத்கம பகுதியில் வன்முறைகளை தூண்ட சிலர் தயாராவதாக தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர் மீண்டும் இனவாதம் தலைதூக்க அரசாங்கம் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

கடந்த காலத்தில் இனவாதத்தை தூண்டும் வகையில் ஆற்றப்பட்ட உரைகளினால் அளுத்கம பகுதிகளில் கலவரம் வெடித்து இன நல்லுறவுக்கு குந்தகம் ஏற்பட்டது. இவ்வாறான விபரீதங்களை தடுக்க இனவாதம் மதவாதத்தை தூண்டும் கையில் உரையாற்றுவோரை கைது செய்து நீதிமன்றத்தினூடாக 2 வருடம் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

இம்முறை தேர்தலில் பொதுபல சேனவும் போட்டியிடுகிறது. அதன் செயலாளர் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுகிறார். அளுத்கமை பகுதியில் பிரசார கூட்டமொன்றை நடத்தி அப்பகுதியில் கலவரம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியிலுள்ள பள்ளிகள், கடைகளை தாக்கவும் தயாராவதாக அறியக் கிடைத்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு பொலிஸாரால் கைதாவதன் மூலம் அரசியல் லாபம் பெறுவதே இவர்களின் நோக்கமாகும். இதற்கு இடமளிக்க முடியாது.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இனவாத சக்திகளின் செயற்படுகள் தடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தலைதூக்க இடமளிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

3 comments:

  1. நன்றி DR. RAJITHA .ஆனாலும் நம்மவர்களும் கொஞ்சம் அடக்கி வாசிக்க பழகணும்.நாம் சிறுபான்மை என்பதை நன்கு உணர்ந்து நடக்க வேண்டும் . அன்மையில் நோன்பு தராவீஹ தொழுகையின் போது பேருவேலையில் நடந்த சம்பவம்.பள்ளியின் முன்னாள் பெரும்பான்மை இன வாலிபர்கள் பாட்டு போட்டு வந்தால் ஏன் நாம் நேரடியாக நிறுத்த போகவேண்டும் பள்ளி உள்ளே இருந்து பொலிசாருக்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்ப்படுத்தி இருந்தால் அவர்கள் வந்து பார்த்துக்கொள்வார்கள்.இதை விட்டுப்போட்டு சண்டித்தனம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..ஓரளவுக்கு நாமும் பொறுமையாக நடக்க பலகை வேண்டும் அப்போதுதான் அல்லாஹ்வின் உதவி வரும் .

    ReplyDelete
  2. Not only in election time always should care about this

    ReplyDelete
  3. சரியாக சொன்னீர்கள் ஸ்ரீ லங்கா வில் வாழும் முஸ்லிம்கள் சவுதி இல் வாழும் முஸ்லிம்களை விட துல்லுஹின்றார்கள் எதனையும் சண்டி தனத்தில் சாதிக்க பாகிரார்கள் அன்மாயில் ஒரு முஸ்லிம் நபர் மோட்டார் சைக்கில் போலீஸ் பிடித்தது என்று போட்டு என்ன கூச்சல் போடுறாரு பார்கவோ அசிங்க மாக இருக்கு அத face Book காணலாம் எதுவானாலும் நீதியை நாட வேண்டும் அனாஹரீக மாட்ட முறையில் நடந்து கொள் வத்தால் எல்லோருக்கும் ஆபத்து

    ReplyDelete

Powered by Blogger.