கிரிக்கெட் போட்டிகளை நிதானமாக அணுகுவோம் - ஜம்இய்யத்துல் உலமா
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஏதாவது ஒரு நாடு வெற்றி பெறலாம். ஆனால் வெற்றியின் போதும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும் நமது நாட்டின் ஐக்கியத்திற்கும் சகவாழ்வுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சகலரும் நடந்து கொள்ளவேண்டும்.
எமது தாய் நாடான இலங்கையில் முஸ்லிம்களாகிய எமக்கு நீண்ட கால வரலாறு உண்டு. வரலாறு நெடுகிலும் நாட்டுக்காக பல பங்களிப்புகளை செய்து, நாட்டுப் பற்றுடனும், ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாகவும் சகவாழ்வுடனும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். காலாகாலமாக முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையே காணப்பட்டுவரும் ஒற்றுமையையும் சகவாழ்வையும் சீர்குலைக்கும் முயற்சியில் பல தீய சக்திகள் ஈடுபட்டுவரும் இந்நிலையில் சிறுபான்மையாக வாழ்ந்து வரும் நாம் மிகுந்த அவதானத்துடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும். 19.07.2015 ஆம் திகதி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சிலர் விளையாட்டு மைதானத்தில் பிழையாக நடந்து கொண்டதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

சர்வதேச விளையாட்டுகளின் மூலம் நாடுகளுக்கிடையிலான உறவுகள் பலப்படுகின்றன. விளையாட்டுகள் என்பவை ஓய்வு நேரத்தை குதூகலமாகவும் மனதுக்கு இதமாகவும் கழிப்பதற்கான வாய்ப்புகளைத் தருகின்றன. மேலும் அவை சிறந்த உடற்பயிற்சியாக அமைகின்றன. இந்த எல்லைகளை தாண்டி பரஸ்பர வெறுப்பையும் இன முறுகல்களையும் தோற்றுவிக்கும் ஊடகங்களாக அவற்றை நாம் மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனமானதல்ல. மேலும் இவற்றை அடிப்படையாகக் கொண்ட சூதாட்டங்கள் மற்றும் நேரத்தை வீணாகக் கழித்தல் போன்ற ஷரீஅத் தடைசெய்த விடயங்களை ஒவ்வொரு முஸ்லிமும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
இது போன்ற உணர்வுபூர்வமான நிகழ்வுகள் நடைபெறுகின்றபோது உலமாக்கள் தமது குத்பாப் பிரசங்கங்களையும் உரைகளையும்; இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டுமெனவும் மஸ்ஜித் நிர்வாகிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU is an non governmental organization NGO, and no body knows their constitution, how they choose their members, what is the administrative infrastructure. etc. ACJU is the main reason for division among muslims in SL. and is not mahanayaka mullas of sri lankan muslim community.
ReplyDeleteஇலேசான முறையில் இந்த விடயங்களை கையாள முடியாது உலமா சபையும் சூரா கமிட்டியும் மற்றும் புத்தி ஜீவிகளும் ஒரு பாரிய முயற்ச்சி எடுக்க வேண்டும்.இதை சாதாரணமாக இளைஞர்கள் விளையாட்டு என்று பாரமுகமாக இருந்தால் நம்மிடம் இருந்து வெளிப்படும் சின்ன சின்ன தவருகையல்லாம் பெரும் பிரச்சினையாக இனவாதிகள் எடுத்துக்கொள்கிறார்கள்.விசேசமாக சகல பள்ளிவாசல்களிலும் இது சம்மந்தமான குத்பா பிரசங்கம் மற்றும் விழிப்பூட்டும் நிகழ்சிகள் நடத்தப்பட வேண்டும்.கிரிக்கட் பார்க்கும் முஸ்லிம்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும்.
ReplyDeleteNobody goes to the stadium to listen to the politics of Ulema or any other lecturers ,
ReplyDeletehuman psychology demands people to have some pastimes , go out and enjoy.
Life may be one thing to one section of the people and completely another thing
to another section. Sport is to enjoy and to compete with others . Like minded people
get together and watch others competing . Find out who makes it communal ? Teach
them to behave on the ground and catch the culprits and punish them for breaking
sport rules . Don't ask sport fans to behave dumb and deaf on the pavilion. They are
not going there for that . All those who enter the stadium must respect each other's
rights without playing race card there. Cricket board and the police have to ensure
law and order and that's their job. Whoever breaks the law , catch them and remove
from the stadium Muslim or Sinhala ! There's a law for everything and all they got to
do is implement it . No need for the Ulema to come out for everything I suppose .
Too late advs.pak.varum poothu ithai solanum
ReplyDelete