சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை, அதிரடியாக ரத்துச்செய்த மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா இன்று (15) கூட்டியிருந்த கட்சியின் செயற்குழுக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின்படி கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் என்று அனுர பிரியதர்ஷன யாப்பா அறிவித்திருந்தார்.
கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இலங்கை மன்றக் கல்லூரிக்கு சமுகமளிக்க வேண்டும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.
Very good decision ..........
ReplyDelete