மைத்திரிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை, முறைப்பாடு செய்யவும் நடவடிக்கை - துறவிகள் அமைப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை நடத்துமாறு ஸ்ரீலங்கா துறவிகள் அமைப்பின் தலைவர் வட்டினாபஹா சோமானந்த தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிடம் வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பொதுத் தேர்தலில் கடும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை தொடர்பில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி தனது விசேட உரையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான வேட்பாளர் தோற்பார் என கூறியுள்ளார். ஜனாதிபதி இவ்வாறான கதையை கூறியிருக்கக் கூடாது எனவும் சோமானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment