அஷ்ரப் கண்ட கனவு, ரிசாத் பதியுதீன் ஊடாக நனவாகவுள்ளது - கலாநிதி இஸ்மாயில்
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள
போதிலும் அந்த மாற்றத்தினை முஸ்லிம் மக்களால் முழுமையாக சுவைக்க முடியவில்லை. குறுகிய
அரசியல் வட்டத்துக்குள் கட்டண்டு மீள முடியாமல் தவிக்கின்றனர். அவற்றிலிருந்து சமூகத்தை
விடுவிப்பதே எனது முதற்பணியாகும். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட
வேட்பாளரும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில்
தெரிவித்தார்.
எதிர்வருகின்ற பொதுத்தேர்தல் தொடர்பில்
அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை(19) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.
முஸ்லிம் சமூகம் தனித்துவமாக இருந்து
கொண்டு சிங்கள தேசிய தலைமைகளுடன் நெருக்கமான உறவை பேணி சுயநலங்களை கைவிட்டு முஸ்லிம்
சமூகத்தின் தேவைகளை முன்னிலைப்படுத்திய மறைந்த தலைவர் அஷ்ரப் கண்ட கனவு இன்று ரிசாத்
பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக நனவாகவுள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையிலே- முஸ்லிம்களின்
இதயம் என வர்ணிக்கப்படும் அம்பாறை மாவட்டத்தில் நாம் எமது முஸ்லிம் அடையாளத்துடன் இன்று
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்துவமாக களமிறங்கியுள்ளது.
ஜனவரி 08ஆம் திகதி ஏற்பட்ட அரசியல்
மாற்றமானது எமது சமூகத்தை வந்தடையவில்லை என்பதுதான் கவலையான விடயமாகும். அந்த மாற்றத்திற்கு
சம்மாந்துறை மண்ணில் இருந்து தலைமை கொடுப்பதே எனது முதற்பணியாகும். அதுபோன்று அம்பாறை
மாவட்டத்தில் பிரதேசவாதம் என்பது தற்போது சில்லறை அரசியல்வாதிகளினால் தளைத்தோங்கி காணப்படுகின்றது.
இவற்றுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் முற்றுப்புள்ளி வைப்பேன்.
அதுமட்டுமன்றி எனது இந்த பயணத்தில்
அம்பாறை மாவட்டத்தின் அனைத்து முஸ்லிம் கிராமங்களையும், அரவணைத்து தமிழ் மற்றும் சிங்கள
கிராமங்களையும், மக்களையும் இணைந்துக் கொண்டு
செயற்படத்திட்டமிட்டுள்ளேன். இன மத பிரதேச வேறுபாடுகள் இல்லாமல் அரசியல் பயணத்தை தொடருவதே முதற் நோக்கமாகும். அதற்கான
ஒரு சந்தர்ப்பத்தினை எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை தரவேண்டும் என்றார்.
எப்படியோ ஆளுக்கொரு கச்சியில் போட்டியிட்டு குரங்கு அப்பம் பிரிச்சமாதிரி முஸ்லிம் காங்கிரசில் இருந்தோ உங்களுடைய அகில இலங்கை காங்கிரசில் இருந்தோ அல்லது அதாவுள்லாவின் காங்கிரசில் இருந்தோ முஸ்லிம் பிரதிநிதி வருவதை தடுத்து மக்களை நாடு ரோட்டில் விடுவதுதான் உங்களின் இப்போதைய முயச்சி பொதுமக்கள் எத்தின கச்சிக்கு வாக்களிக்க முடியும் உங்களுக்கல்லாம் பைத்தியம் என்று எங்களையும் பைத்தியமாக ஆக்கி இரண்டும் கேட்டான் நிலைக்கு ஆக்குகிரீர்களே.
ReplyDeleteAsrafin kanvo slmc.5 thundu poduwada
ReplyDeleteஹா ஹா...! படித்தவர், புத்தி ஜீவி...! சார் அறிமுகம் தானே போகப் போக சரியாக போகும்.
ReplyDeleteசாதாரண பாமர மகனுக்கு விளங்கிய "முஸ்லிம்களின் ஒற்றுமை, முஸ்லிம்களின் அதி கூடிய பிரதிநிதித்துவம்" போன்ற விடயங்கள் இந்த காலாநிதிக்கு விளங்கவில்லையே ?????
ஹா ஹா...! படித்தவர், புத்தி ஜீவி...! சார் அறிமுகம் தானே போகப் போக சரியாக போகும்.
ReplyDeleteசாதாரண பாமர மகனுக்கு விளங்கிய "முஸ்லிம்களின் ஒற்றுமை, முஸ்லிம்களின் அதி கூடிய பிரதிநிதித்துவம்" போன்ற விடயங்கள் இந்த காலாநிதிக்கு விளங்கவில்லையே ?????
அஸ்ரப் சேர் கண்ட எந்தக் கணவை ரிசாட் அவர்கள் நிறைவேற்றினார் என்று உங்களால் கொஞ்சம் சொல்ல முடியுமா சேர்,உங்கள் பெயர் ஏற்கனவே ரிபெயர் ஆகிவிட்டது கானாத குறைக்கு இதிலும் மூக்குடைபடப் போகிறீர் ரிடயர் காலத்திலும் கேவலப் படவேண்டும் என்று விதி
ReplyDelete
ReplyDeleteஎதுப்பா அஷ்ரபின் கனவு, சுயநலத்திற்காகவும், சுகபோகத்திற்காகவும், மரத்தை கூறு போட்டு சமுகத்தை சின்னாபின்னமாக்கி, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்று அறிக்கை விடுகிறீர்களே இதுவா அஷ்ரபின் கனவு? கொள்ளை அடிப்பதில் பேர்போன அதாபுல்லா தலைவர் முஸ்லிம் காங்கிரசை கலைத்து விட்டார் நுஹா மட்டும்தான் முஸ்லிம்களுக்கான கட்சி என்று அறிக்கை விடுகிறார் , கொள்கையே இல்லாத தன் சுயநலத்திற்காக மட்டுமே பாடுபடும் ஹிஸ்புல்லாவும் அஷ்ரபின் கனவு பற்றி அறிக்கை விடுகின்றார். இடை இடையே மலையேறிய இஸ்ஸதீன் மழை காலத்து தவளை போல் அறிக்கை விடுகின்றார். இதற்கிடையே மகிந்தவின் காதலன் பஷீரின் கூப்பாடு வேறு. உங்களின் சுகபோக வாழ்வுக்காக சமுகத்தை பிரித்து பிரதேச வாதத்தை விதைத்து அப்பாவி முஸ்லிம்கள் அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் நிலைமையை உருவாகியுள்ள நீங்களெல்லாம் உண்மையான முஸ்லிம்களா? சமுகத்தை கூறு போட்டவன் எங்கனம் உண்மை முஸ்லிமாக இருக்க முடியும்?. மன்னிக்கவும் உங்களுக்கு சமயம் என்பது சமயத்திற்கு கை கொடுக்கும் ஒரு காரிணி அவ்வளவுதானே? சாய்ந்தமருதுக்கு ஒரு எம் பீ , சம்மாந்துறைக்கு ஒரு எம் பீ , அட்டாளைச்சேனைக்கு ஒரு எம் பீ , அக்கரைப்பற்றுக்கு ஒரு எம் பீ, பொத்துவிலுக்கு ஒரு எம் பீ இறக்காமத்திக்கு ஒரு எம் பீ கல்முனைக்கு ஒரு எம் பீ , மருதமுனை, காத்தான்குடி, ஏறாவூர் , வாளைச்சேனை இவைகளுக்கு தலா ஒரு எம் பீ, முடியலப்பா. இந்த மக்கள் கேட்டார்களா ஊருக்கொரு எம் பீ வேண்டுமென்று? நிச்சமாக இல்லை, அரசியல்வாதிகள் நீங்கள் உங்கள் சுய லாபத்திற்காக பிரதேச வாதத்தை வளர்த்து விட்டீர்கள் - அதற்காக நீங்கள் எடுத்த ஆயுதம்தான் அஷ்ரபின் கனவு, தூ ....துப்புக் கெட்டவர்களே வெட்கமாக இல்லை. சமகாலத்தில் இத்தனை பேர் இருந்தும் சமுகத்திற்காக செய்தது என்ன. பாவிப்பாரற்று இற்றுப்போன நுரைச்சோலை வீடுகளை மீட்க முடிந்ததா? அதற்கு ஆப்பு வைத்த பெருமை அதாபுல்லாவை அல்லவா சாரும். மன்னார் மறிச்சுக்கட்டி மக்களின் மீள் குடியேற்றத்திற்காக ஓரணியில் உங்களால் திரள முடிந்ததா? அது ரிஷாத்தின் பிரச்சினை பள்ளியுடைப்பை எதிர்த்து ஒரு அறிக்கை விட முடிந்ததா? ஆம் முடிந்தது அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று ஹிஸ்புல்லாவால், இப்படி சிறு சிறு சம்பவங்கள் நடக்கத்தான் செய்யுமென்று அதாபுல்லாவால், அளுத்கமவை பற்றி ஒரே அணியிலிருந்து பேச முடிந்ததா? பர்தா எதிர்ப்பு, ஹலால் எதிர்ப்பு இவைகளுக்காக உங்களலால் ஓரணியில் திரள முடிந்ததா " அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" நீங்கள் எங்கே திரண்டீர்கள்? சமுக அக்கறை இருந்ததால் ஓரணியில் திரள முடிந்திருக்கும் உங்களிடமிருப்பது சுய நலமும் பிரதேச வெறியும் தானே.
இன்சாஹல்லாஹ். VC MP
ReplyDeleteஇவர்கள் எல்லாம் உண்மையான புத்தி ஜீவிகளாக இருந்தால் முஸ்லிம் அரசியல்வாதிகளையல்லாம் ஓன்று சேர்த்து ஒருகொடியின்கீல் கொண்டு வந்து இருக்கமுடியும்.பதவி ஆசை பேராசிரியர்களையும் விட்டு வைக்க வில்லை சாதாரண அப்பாவி மக்களுக்கு விளங்குது அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் பல முஸ்லிம்கள் தேர்தலில் போட்டி இட்டால் தோல்வி அடைந்து முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என்று நன்கு அரசியல் வரலாறு படித்து ஒரு பல்கலைக்கழக உபவேந்தருக்கு புரிவில்லை.ஏன் பதவிமோகம் அதுஒரு வகையான வெறி இந்த பதவி வெறி தலைக்கு ஏறினாள் மதி வேலை செய்யாது .
ReplyDeletePlease discard all these parties and VOTE FOR JVP.who at least voiced their strong opposition to Communal politics.
ReplyDeleteDear former VC,
ReplyDeleteYou a talking about unity of Muslim ummah. You have no right to talk lt. Fisrt you ask community to your theft and correption in the university for last 6 Years. FCID will proof all of this very soon. Can you come for a open debate with me in this regard. If not, please withdraw from contesting in election.ok.
குருவிக்கு வைத்தியம் செய்யவேண்டும்.
ReplyDelete