Header Ads



பாராளுமன்ற தேர்தல் குறித்து, அரச புலனாய்வு சேவை நடத்திய கருத்துக்கணிப்பின் விபரம்

எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து அரச புலனாய்வு சேவை நடத்திய கருத்துக்கணிப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அறிக்கையில் அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணி 10 மாவட்டங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 9 மாவட்டங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று மாவட்டங்களில் தனது பலத்தை உறுதிப்படுத்தும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மிகவும் விபரமாக தயாரிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் பிரகாரம், அரசியல் கட்சிகள் மாவட்டங்களில் பெறும் வாக்கு எண்ணிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாடு முழுவதுமாக ஐக்கிய தேசியக் கட்சி 47 வீத வாக்குகளை அதாவது 52 லட்சத்து 61 ஆயிரத்து 322 வாக்குகளை பெறும்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 41 வீத வாக்குகளை பெறும் அதாவது 46 லட்சத்து 6 ஆயித்து 411 வாக்குகளை பெறும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 6 லட்சத்து 149 வாக்குகளையும் மக்கள் விடுதலை முன்னணி 4 லட்சத்து 69 ஆயிரத்து 430 வாக்குகளை பெறும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கையின்படி கொழும்பு,

புத்தளம், பதுளை, அம்பாறை, திருகோணமலை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, பொலன்நறுவை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதமான சூழ்நிலை காணப்படுகிறது.

யாழ்ப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமான நிலைமை காணப்படுகிறது. ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.

அதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பதிவாக வாக்குகளை விட இம்முறை குறைவான வாக்குகளே பதிவாகும். 75 வீத வாக்குகள் பதிவாகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 81 வீதமானவர்கள் வாக்களித்திருந்தனர். அதேவேளை காலி, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் தேர்தல் முடிவுகள் தேர்தல் பிரசாரங்களின் தன்மைக்கு ஏற்ப மாறுப்படலாம் எனவும் அரச புலனாய்வு சேவையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.